Published:Updated:

`கனகவல்லி மீது ஏன் குண்டர் சட்டம்?!’- திருவாரூர் முருகன் விவகாரத்தின் அடுத்தகட்டம்

போலீஸ் பிடியில் மணிகண்டன், கனகவள்ளி

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

`கனகவல்லி மீது ஏன் குண்டர் சட்டம்?!’- திருவாரூர் முருகன் விவகாரத்தின் அடுத்தகட்டம்

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Published:Updated:
போலீஸ் பிடியில் மணிகண்டன், கனகவள்ளி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த மாதம் 2-ம் தேதி அதிகாலையில் நடந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நகைக்கடை தரைதளத்தின் சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்களால், 28 கிலோ தங்க நகைகள், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து கோட்டைக் காவல்நிலையத்தில், லலிதா ஜுவல்லரியில் மேலாளராகப் பணிபுரியும் நாகப்பன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறை தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

முருகன், மணிகண்டன், சுரேஷ்
முருகன், மணிகண்டன், சுரேஷ்

இந்நிலையில் திருவாரூர், மடப்புரம், தென்கரை, முக்தி விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் இளங்கோவன் மகன் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட திருவாரூர் முருகனின் அக்காவும் திருச்சி சிறையில் உள்ள சுரேஷின் அம்மாவான கனகவள்ளியும் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 450 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுரேஷின் தாய் கனகவல்லி
சுரேஷின் தாய் கனகவல்லி

அதன்பிறகு, திருச்சி வங்கிக் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய முருகன் உள்ளிட்டோர் குறித்து தகவல் வெளியானது. அடுத்து முருகனும் சுரேஷும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தொடர்ந்து கொள்ளையர்களான கணேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் தனது தாய் கனகவள்ளி மற்றும் தந்தை குணசேகரன், சித்தி அமுதா மற்றும் சரவணன், மாரியப்பன், முருகனின் அண்ணன் செல்வத்தின் மகன் முரளி மற்றும் குணா, மாறன், பிரதாப் உள்ளிட்ட பலரை போலீஸ் சித்ரவதை செய்வதாக சுரேஷ் குற்றம் சாட்டினார்.

சுரேஷ், கணேசன் உள்ளிட்டோரை கஸ்டடியில் எடுத்து தொடர்ந்து விசாரித்துவரும் போலீஸார், பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்டு பறிமுதல் செய்துவருகின்றனர். பெங்களூரு சிறையில் உள்ள முருகனை கஸ்டடியில் எடுத்துவிசாரிக்க, திருச்சி தனிப்படை போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும் அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி மகளிர் தனிச்சிறையில் அடக்கப்பட்டுள்ள கனகவல்லி மற்றும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை, சிறைகளில் இருக்கும் மணிகண்டன் மற்றும் கனகவள்ளிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்தக் கனகவல்லி

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் இரண்டாவதாகக் கைது செய்யப்பட்டவர்தான் இந்தக் கனகவல்லி. திருவாரூர் முருகனின் மூன்று சகோதரிகளில் ஒருவர். இந்தக் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருவாரூர் முருகனின் மைத்துனர் சுரேஷின் தாய். திருவாரூர், பேபி டாக்கீஸ் ரோடு, சீராத்தெருவில் வசிக்கும் இவர், சாலைபோடும் வேலைகளுக்குச் சென்று வந்தார். கணவர் பன்னீர் செல்வம் இல்லாததால், சுரேஷ் வளர்ந்து ஆளாகும்வரை பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அவ்வப்போது முருகன் திருவாரூர் வந்தால் கனகவல்லி வீட்டில்தான் தங்கியிருப்பார். அதனால் சுரேஷ், முருகன் மீது அளவுக்கதிகமான பாசத்துடன் இருப்பார். சுரேஷ் வளர்ந்த பிறகு, முருகனுடன் சேர்ந்தார். பல்வேறு மாநிலங்களில் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றிய முருகன் மற்றும் சுரேஷ், போலீஸாரின் நடவடிக்கைகளுக்குப் பயந்து திருவாரூரில் உள்ள கனகவல்லியின் வீட்டிலேயே தங்குவார்கள். போலீஸாரிடம் துணிச்சலாகப் பேசும் கனகவல்லி, முருகனைப் பார்த்தே பல வருஷம் ஆகிறது என அனுப்பிவிடுவாராம். சில நேரங்களில், கனகவல்லி மற்றும் முருகன் உறவினர்கள் வசிக்கும் சீராத்தோப்பு பகுதிக்குள் போலீஸாரே செல்லப் பயப்படுவார்களாம்.

இந்தநிலையில் போலீஸார், கனகவல்லியிடமிருந்து 450 கிராம் எடையுள்ள தங்க நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையைக் கனகவல்லி மறைத்து வைத்திருந்ததாகவும், திருட்டு நகைகளைப் பதுக்கி வைக்க உதவியதாகவும் அவர் மீது போலீஸார் குற்றம்சாட்டுகிறார்கள்.

பெங்களூரு சிறையில் உள்ள முருகனை அம்மாநில போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். பலமுறை தமிழக போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முயற்சி செய்தும் பலனில்லை. காலதாமதம் ஆகிறது. கனகவல்லியைக் காட்டி சுரேஷ் மற்றும் முருகனைச் சரணடைய வைத்த போலீஸார், தற்போது முருகனைத் தமிழகம் கொண்டுவர கனகவல்லி மீது குண்டர் சட்டம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.