Published:Updated:

திருப்பூர்: தந்தை பெற்ற ரூ.20,000 கடன்; கொத்தடிமைக் கொடுமை அனுபவித்த 3 குழந்தைகள்- மீட்ட அதிகாரிகள்!

கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

தேங்காய் கொப்பரைக் களத்தில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேரை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர்: தந்தை பெற்ற ரூ.20,000 கடன்; கொத்தடிமைக் கொடுமை அனுபவித்த 3 குழந்தைகள்- மீட்ட அதிகாரிகள்!

தேங்காய் கொப்பரைக் களத்தில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேரை அதிகாரிகள் மீட்டனர்.

Published:Updated:
கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

திருப்பூர் மாவட்டம், பாப்பிரெட்டிப்பாளையம் ஊராட்சி துண்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (51). இவர் தேங்காய் கொப்பரைக் களம் வைத்திருக்கிறார். கருணாமூர்த்தியின் கொப்பரைக் களத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக காங்கயம் வட்டாட்சியர் புவனேஸ்வரிக்கும், சைல்டு ஹெல்ப் லைனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அதையடுத்து கொப்பரைக் களத்தில் தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், காங்கயம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு 2 சிறுமிகள், ஒரு சிறுவர் பணியமர்த்தப்பட்டதும், அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், இறையன்காடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

கொத்தடிமை
கொத்தடிமை
சித்திரிப்புப் படம்

இதையடுத்து, 3 பேரையும் மீட்ட வருவாய்த் துறையினர், திருப்பூர் பகுதியிலுள்ள ஒரு காப்பகத்தில் அவர்களை தங்கவைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தேங்காய் கொப்பரைக் களத்தில் பணியாற்றி வந்த குழந்தைகளின் தந்தை, உரிமையாளர் கருணாமூர்த்தியிடம் முன்பணமாக ரூ.20,000 பெற்றிருக்கிறார். அந்தக் கடன் தொகையை கழிப்பதற்காக குடும்பமாக வேலை செய்து வந்திருக்கின்றனர்.

மொத்தம் 7 பேர் 5 மாதங்கள் வேலை செய்திருக்கின்றனர். ஆயிரம் தேங்காய்களை உரித்து, அவற்றை காயப்போட்டு பக்குவத்துக்கு கொண்டுவர நாளொன்றுக்கு ரூ.280 கூலி வழங்கி, அதை அவர்கள் பெற்ற கடனுக்காக கழித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.