Published:Updated:

சாக்லேட் திருடிய புகார்; மனநலம் குன்றிய சிறுவனைப் பிரம்பால் அடித்த ஊர்க்காரர்கள்-ராமநாதபுரம் சர்ச்சை

சிறுவனின் தாயார் 30.09.21-ம் தேதி காவல் நிலையத்தில் சிறுவனை அசிங்கமாகப் பேசி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள்மீது புகார் கொடுத்துள்ளார்.

கடையில் சாக்லேட் திருடியதாக மனநலம் குன்றிய சிறுவனை ஊர்க்காரர்கள் பிரம்பால் தாக்கிய சம்பவம் சாயல்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்
தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே டி.மாரியூரிலுள்ள கடையில் கடந்த 25-ம்தேதி சாக்லேட் திருடியதாகக் கூறி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை ஊர்க்காரர்கள் முன்னிலையில் சிலர் பிரம்பால் தாக்கியிருக்கிறார்கள். அப்போது சிறுவனின் தந்தையும் உடனிருந்திருக்கிறார், தலையில் காயமடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கைவிடாத  தஞ்சை கலெக்டர், கண்ணீரைத் துடைத்த விகடன்; நெகிழும் சிறுவன்!

சிறுவனைத் தாக்கும் சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தநிலையில் அந்தச் சிறுவனின் தாயார் நதியாபானு சாயல்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறை
காவல்துறை

அதன் அடிப்படையில் மாரியூரைச் சேர்ந்த முத்து முகம்மது, முஜாபர் அடிமை, அமீர், செய்யது அபுதாகீர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தோம், ``மாரியூரைச் சேர்ந்த புருக்கான்- நதியா பானு தம்பதியின் மூத்த மகன், 11-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்குச் சிறிய அளவில் மனநல பாதிப்பு இருப்பதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளம் சிறாரான அவர்களின் மகன் நண்பருடன் சேர்ந்து டி.மாரியூரில் அப்துல் ரகுமான் என்பவரின் கடையில் சாக்லேட் திருடியதாகவும், அதைக் கடைக்காரர் ஜமாத் தலைவரிடம் புகார் செய்ய, ஜமாத்தைச் சேர்ந்த முத்து முகம்மது, முஜாபர் அடிமை, அமீர், செய்யது அபுதாகீர் ஆகியோர் கடந்த 25.09.21-ம் தேதி அந்தச் சிறுவனை அவருடைய தந்தையுடன் சேர்த்துக்கொண்டு அசிங்கமாகப் பேசி, கம்பால் அடித்து தாக்கியுள்ளனர்.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

இது சம்பந்தமாக சிறுவனின் தாயார் 30.09.21-ம் தேதி காவல் நிலையத்தில் சிறுவனை அசிங்கமாகப் பேசி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல்விடுத்தவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

சிறுவன் தவறே செய்திருந்தாலும், அதை சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் ஊர்க்காரர்களில் சிலரே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு