Published:Updated:

WhatsApp: வாட்ஸ்அப் சாட் ஹேக்கிங்; மாணவிகள்தான் குறி! - ஹரியானாவை அதிரவைத்த கும்பல்

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியை ஹேக் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேரை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்பை ஹேக் செய்து, தனது தகவல்களை வெளியிட்டுவிடுவேன் என போனில் மிரட்டல் வருவதாக ஃபரிதாபாத் சைபர் கிரைமில் பெண் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய ஹரியானா சைபர்கிரைம் போலீஸாருக்கு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்ட போலீஸார், மிரட்டல் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேரைக் கைது செய்திருக்கிறார். அவர்களில் ஒருவர் 12ம் வகுப்பை சமீபத்தில் முடித்த 17 வயதுச் சிறுவன். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பேசிய ஹரியானா போலீஸார், ``பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், வாட்ஸ் அப் சாட்டை ஹேக் செய்து பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மணீஷ், பூஜா மற்றும் மைனர் ஒருவர் என 3 பேரைக் கைது செய்திருக்கிறோம்.

விசாரணையில் அவர்கள், பல்வால், ஃபரிதாபாத், குருகிராம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களிடமிருந்து பெண்களின் செல்போன் நம்பர்களைப் பெற்றதாகச் சொல்கிறார்கள். பின்னர், குறிப்பிட்ட மாணவிகளின் வாட்ஸ்அப் சாட்டை எப்படியோ ஹேக் செய்து அவர்களது தனிப்பட்ட தகவல்களைத் திருடுகின்றனர்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

அதன்பின், அந்த மாணவிக்கு போன் செய்து தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து அதில், பணம் போடவில்லை என்றால் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளிக்கு வந்துவிடும் என மிரட்டியிருக்கிறார்கள். இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து பலர் வங்கிக்கணக்குகளில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.

`பணம், நகை; பெண்கள் மட்டும்தான் குறி!’ - ஃபேஸ்புக் மூலம் மோசடி செய்த அறந்தாங்கி இளைஞர்

அதேபோல், இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்குப் போலி ஆதார் அட்டைகள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை அப்பகுதியில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் பணிபுரியும் சத்தார் கான் என்பவர் கொடுத்து உதவியதும் விசாரணையில் தெரியவந்தது. சத்தார் கான் கொடுக்கும் நம்பரிலிருந்து மாணவிகளைத் தொடர்புகொண்டு மணீஷ் மற்றும் பூஜா ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். அதேபோல், பாதிக்கப்பட்ட மாணவிகளின் போனை ஹேக் செய்யும்போது அந்த போனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்போன் நம்பர்களை எடுத்து, அவர்களுக்கும் மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள்’’ என்றனர்.

ஹரியானா போலீஸ்
ஹரியானா போலீஸ்

இந்தநிலையில், போலி ஆதார் அட்டைகள் மூலம் பெறப்பட்ட 392 செல்போன் நம்பர்களைச் செயலிழக்கச் செய்துவிட்டதாக ஹரியானா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய ஹரியானா மாநிலச் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நவ்தீப் சிங் விர்க், `கடந்த மே 12ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை போலி ஆதார் அட்டைகள் கொடுத்து பெறப்பட்ட 392 சிம்கார்டுகளை டிஆக்டிவேட் செய்திருக்கிறோம். இதுபோன்ற மோசடிக் கும்பல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வேறுயாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு