Published:Updated:

தெலங்கானா: அரசுப் பள்ளியில் பாலியல் வன்கொடுமை! - தலைமையாசிரியரால் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தெலங்கானா மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றில் ஐந்து மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளியில் பயிலும் 7 முதல் 11 வயதுள்ள ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்திருக்கிறது. இந்தக் குற்றங்களுக்காக காவல்துறையினர் ஐபிசி 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடிவருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

``பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சையின்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி, தன் பெற்றோரிடம் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளைப் பற்றிக் கூறியிருக்கிறார். 40 வயதான அந்தத் தலைமை ஆசிரியர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்தக் குற்றச் செயலைச் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக ஆபாசப் படங்களைப் பார்க்க வற்புறுத்தியதும் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்” என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெங்களூரு: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - 68 வயது பூசாரி கைது

குறிப்பிட்ட சிறுமி பாதிக்கப்பட்டது தொடர்பான விசாரணையின்போதுதான், வேறு சில சிறுமிகளையும் அந்தத் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த அந்தத் தலைமை ஆசிரியர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவரைக் காவல்துறையினர் தேடிவருகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகளைச் (ஐ.சி.டி.எஸ்) சேர்ந்த அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணையை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

தினமும் தலைமை ஆசிரியரே சிறுமிகளின் வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்வார் என்றும், அப்போது, `எனது பெண் பள்ளிக்குச் செல்ல விரும்ப மாட்டாள்’ என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறியதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார். மேலும், ``இது குறித்துப் பலமுறை சிறுமிகளிடம் கேட்டபோதும் அவள் எதுவும் சொல்லவில்லை. இப்படி ஒரு கோணத்தில் நாங்கள் யாரும் யோசிக்கவே இல்லை” என்றும் சிறுமியின் தாயார் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பலமுறை கேட்ட பிறகே சொன்னதாகவும், அந்தத் தலைமை ஆசிரியர் சிறுமிகளைக் கத்தியைக் காட்டி `இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது’ என்றும் மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அந்தத் தலைமை ஆசிரியரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்ட பிறகுதான் முழு விவரமும் தெரியவரும். தலைமறைவான அவரைத் தேடிவருவதாகவும், விரைவில் கைதுசெய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளித் தலைமை ஆசிரியரே மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு