Published:Updated:

"டாக்டர் பட்டம் வாங்கலையோ டாக்டர் பட்டம்?!"- தமிழகத்தில் பெருகி வரும் போலியான பட்டங்களின் பிசினஸ்!

டாக்டர் பட்டம்

கவுனை மாட்டிவிட்டு உள்ளூரில் அச்சிடப்பட்ட மதிப்புறு முனைவர் என்ற சான்றிதழை வழங்குவார்கள். மறுநாள் நாளிதழ் முதல் ஏரியாவிலுள்ள சுவர்கள் வரை நம்ம வெட்டி பந்தா பார்ட்டி பட்டம் வாங்கிய போட்டோவுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார்.

"டாக்டர் பட்டம் வாங்கலையோ டாக்டர் பட்டம்?!"- தமிழகத்தில் பெருகி வரும் போலியான பட்டங்களின் பிசினஸ்!

கவுனை மாட்டிவிட்டு உள்ளூரில் அச்சிடப்பட்ட மதிப்புறு முனைவர் என்ற சான்றிதழை வழங்குவார்கள். மறுநாள் நாளிதழ் முதல் ஏரியாவிலுள்ள சுவர்கள் வரை நம்ம வெட்டி பந்தா பார்ட்டி பட்டம் வாங்கிய போட்டோவுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார்.

Published:Updated:
டாக்டர் பட்டம்
"டாக்டர் பட்டம் வேண்டுமா, எங்களைத் தொடர்பு கொள்ளவும்..." என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் அதிர்ச்சியானார்கள். ஆனால், இது நமக்குப் புதுசு இல்லை. டாக்டர் பட்டம் வாங்கித் தருவதற்கென்றே தமிழகத்தில் ஏகப்பட்ட ஏஜென்ட்டுகள் நீண்டகாலமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு மறைமுகமாகச் செயல்பட்டார்கள். டெக்னாலஜி காலம் என்பதால் தற்போது வெளிப்படையாகவே ஆரம்பித்துவிட்டார்கள்.
டாக்டர் பட்டம்
டாக்டர் பட்டம்

மருத்துவக் கல்லூரியில் ஐந்து வருடங்கள் படித்து டாக்டர் பட்டம் வாங்குவதும், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவதும் எவ்வளவு கஷ்டம் என்பது அதை வாங்கியவர்களுக்குத் தெரியும். அதேபோல் அரசியல், இசை, இலக்கியம், சமூகசேவையில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்குக் கொடுக்கப்படும் கௌரவ டாக்டர் பட்டங்கள் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இதில் எந்த கேட்டகிரியிலும் வராதவர்கள் பணம் கொடுத்தால் போதும், சினிமாவுக்கு டிக்கெட் கிடைப்பதுபோல டாக்டர் பட்டம் அளிப்பவர்கள். தமிழகம் முழுக்க இதுபோன்று பட்டம் வாங்கிய ஏகப்பட்ட டாக்டர்களும், சமூக மாமணி, சேவா வைரம் எனும் பெயர்களிலும் விருது வாங்கி உலா வருகிறார்கள்.

கொலை வழக்கில் உள்ளே போனவர்கள், கஞ்சா வியாபாரிகள், கந்துவட்டிப் பேர்வழிகள், கொள்ளை வழக்கில் சிக்கியவர்கள், சாதிச் சங்கத்தலைவர்கள் எனப் பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக்கொண்டு கெத்து காட்டி வருகிறார்கள். கல்யாண போஸ்டர்களிலும் கருமாதி போஸ்டர்களிலும் இந்த டாக்டர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோசடி
மோசடி

போலியான பல்கலைக்கழகங்கள் (!) கொடுக்கும் போலியான டாக்டர் பட்டம் (!) என்பது தெரிந்தும் பல்வேறு விழாக்களில் கலந்துகொள்வது என்று இவர்கள் ரவுசு காட்டுகிறார்கள்.

'சிறைக்கு அஞ்சா சிங்கம், கொலைகாரன்பட்டி கொடுத்த தங்கம், அனைவரையும் ஆபரேஷன் செய்ய அவதாரமெடுத்த டாக்டர் தலையெடுத்தான் அவர்களே வருக வருக...' என்று இவர்கள் வைக்கும் பிளெக்ஸைப் பார்த்து மக்கள் அலறுகிறார்கள்.

வெறுத்துப்போய், "யாருங்க இவங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது?" என்று விவரமானவர்களிடம் விசாரித்தால், விலா நோகச் சிரிக்கும் அளவுக்கு விவரிக்கிறார்கள்.

"நம்ம நாட்டுல அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் கௌரவ டாக்டர் பட்டங்களை யாருக்கும் வழங்க மாட்டார்கள். ஆனாலும், கடந்த காலங்களில் அரசியல் சிபாரிசில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள், அரசியல் கட்சி ஆதரவு கொண்ட செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, சினிமாவில் யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்க ஆரம்பித்தார்கள். அதில் தகுதியானவர்களும் உண்டு, தகுதியற்றவர்களும் உண்டு. இந்த விவகாரமே சர்ச்சையுடன் போய்க்கொண்டிருக்கும் நிலையில்தான், இது எதிலும் சம்பந்தப்படாத கும்பல் ஒன்று டாக்டர் பட்டங்களைக் கூவிக்கூவி விற்கத் தொடங்கிவிட்டது.

டாக்டர் பட்டம்
டாக்டர் பட்டம்
இரிடியம், இருதலைமணியன் பாம்பு, ஈமுக்கொழி, எம்.எல்.எம் பிசினஸ் மாதிரி இவர்களின் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான். வெட்டி பந்தா பேர்வழிகள், புதுப்பணக்காரர்கள், சமூக விரோதிகள், கந்து வட்டிக்காரர்கள், ரவுடிகள், ஏரியா அரசியல்வாதிகள் ஆகியோரை டீசன்ட்டாக ஏமாற்றி, அதன் மூலம் பணத்தைச் சுருட்டுவதுதான்.

சட்டமன்றத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ நெருங்கிவிட்டால் போதும், இவர்கள் கிளம்பிவிடுவார்கள். சுள்ளென்ற வெயிலிலும் சபாரி, ஸ்வெட்டர், ஜெர்க்கின் கோட்டுகளை சட்டைக்கு மேல் போட்டுக்கொண்டு அந்தக் காலத்து நடிகர்கள் கெட்டப்பில் இக்கும்பல் மாவட்டம்தோறும் விசிட் அடிப்பார்கள். அந்தந்த ஊர்களில் இவர்களின் நண்பர்கள் இருப்பார்கள். அவர்களிடம் விசாரித்து ஊரிலுள்ள கந்து வட்டி பார்ட்டிகள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், டுபாக்கூர் சமூக சேவகர்களை நேரில் சந்திப்பார்கள்.

உலக அமைதிப்பூங்கா பல்கலைக்கழகம், உலக தத்துவ பல்கலைக்கழகம், உலக மானுடப் பல்கலைக்கழகம், சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், தான்சானியா பல்கலைக்கழகம், சலாமியா பல்கலைக்கழகம், மகிழ்மதி பல்கலைக்கழகங்களின் தமிழகப் பிரதிநிதி என்று வாய்க்கு வந்த பெயரில் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.

"எங்க டாக்டர் பட்டத்துக்கு உலகம் முழுக்க டிமாண்ட் இருக்கு. பஸ், ரயில், பிளைட்டுல உடனே டிக்கெட் கிடைக்கும். பச்சை மையில் கையெழுத்து போடலாம். முதலமைச்சர், கவர்னர், கலெக்டர், எஸ்.பியை எப்போதும் சந்திக்கலாம்" என்று அள்ளிவிட்டு சிக்கிய ஆட்டுக்குட்டியை அமுக்கிவிடுவார்கள்.

அதில் மயங்கிவிடுபவர்களிடம், "பல்கலைக்கழகத்துக்கும் வருகிற வி.ஐ.பி-களுக்கும் மரியாதை செய்யணும்" என்று ரூ.1 - 2 லட்சம் கறந்துவிடுவார்கள். ஒத்துவராதவர்களிடம் கிடைத்த தொகையை வாங்கிக்கொள்வார்கள். இதுபோல் மாவட்டத்துக்கு 20 பேரைப் பிடித்துவிடுவார்கள்.

டாக்டர் பட்டம்
டாக்டர் பட்டம்

நகரில் ஒரு அரங்கில் பட்டமளிப்பு விழாவை நடத்துவார்கள். யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஏரியா எம்.எல்.ஏ, ரிடையர்டு மாஜிஸ்திரேட், டி.எஸ்.பி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வருவார்கள். கூடவே டி.வி சீரியல் துணை நடிகைகளையும் அழைத்து வருவார்கள். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்று விளம்பரத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வெளிநாட்டுக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் (இருந்தால்தானே வருவதற்கு).

கவுனை மாட்டிவிட்டு உள்ளூரில் அச்சிடப்பட்ட மதிப்புறு முனைவர் என்ற சான்றிதழை வழங்குவார்கள். மறுநாள் நாளிதழ் முதல் ஏரியாவிலுள்ள சுவர்கள் வரை நம்ம வெட்டி பந்தா பார்ட்டி பட்டம் வாங்கிய போட்டோவுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார்.

இவர்கள் சொல்கிற பல்கலைக்கழகங்களை எப்போது தொடங்கினார்கள், யார் தொடங்கினார்கள், எந்த நாட்டில் செயல்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஆளாளுக்கு இப்படி டாக்டர் பட்டம் கொடுக்க அனுமதி இருக்கிறதா என்பதை அதிகாரிகளும் விசாரிப்பதில்லை. ஆனால், ஆண்டுதோறும் இதுபோன்ற டாக்டர் பட்டங்களைத் தங்குதடையின்றி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மோசடி
மோசடி
pixabay

டாக்டர் பட்டங்களை விரும்பாத விளம்பர நோயாளிகளுக்கு 'உலகக் குடிமகன் விருது, பிளானட் விருது, குளோபல் விருது, அல்டிமேட் நோபல் விருது, கிரேட் ஆஸ்கர் விருது, சர்வதேச சமூகக் காவலன் விருது, கேப்டன் அமெரிக்கா விருது, இடி அமீன் விருது, பாடிசோடா விருது, கலிஃபோர்னியா சிறந்த தமிழ் நடிகருக்கான விருது என்று பல பெயர்களில் விருதுகளை வழங்கி அட்டகாசம் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சிறந்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், நல்ல அரசியல்வாதிகளுக்கும் இந்த விருதுகளை வழங்கி விமர்சிக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள்.

இந்த டுபாக்கூர் டாக்டர் பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கும் டுபாக்கூர்களுக்கு எதிராக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தால் சிறப்பாக இருக்கும்.