Published:Updated:

சிஷ்யைகளை வைத்து வலை... சதுரங்க வேட்டையாடிய நித்தி!

நித்தி
நித்தி

சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்

நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் தற்போது 300 ஆசிரமங்கள் இருக்கின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவர்வசம் உள்ளதாகச் சொல்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில்தான் நித்தியின் சொத்து பலமடங்கு பெருகியிருக்கிறது. அதற்கு தன்னிடம் வருபவர்களிடம் அவர் ஆடிய சதுரங்க வேட்டையும் ஒரு காரணம் என்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Pa7Syr

"நித்தியானந்தாவின் பக்தர்கள், உலகம் முழுவதும் வசிக்கிறார்கள். வசதிபடைத்த பலர், ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பார்கள். அவர்களைச் சந்திக்கும் நித்தியின் பக்தர்கள், 'சுவாமிஜியைச் சந்தித்துவாருங்கள். உங்கள் பிரச்னைகள் நொடியில் விலகிவிடும்' என்று வலைவிரிப்பார்கள். சரியென்று நித்தியைச் சந்திக்கச் சென்றால் போதும்... அடுத்து சதுரங்க வேட்டை ஆரம்பமாகும். பிரச்னையைச் சொல்லி தன்னிடம் தீர்வு கேட்பவர்களிடம் தன் வார்த்தை ஜாலத்தால் முதலில் வசியப்படுத்துவார் நித்தி.

சிஷ்யைகளை வைத்து வலை... சதுரங்க வேட்டையாடிய நித்தி!

பிரச்னைக்குத் தீர்வாக ஒரு பரிகாரத்தைச் செய்யச் சொல்வார். சிக்கியவர்களின் வசதிக்கேற்ப, 'கோயில் கட்டினால் சரியாகும்', 'கோசாலை அமையுங்கள்', 'தங்கத் தேர் செய்து ஆசிரமத்துக்கு அளியுங்கள்' என்று விதவிதமாக பரிகாரங்கள் சொல்வார். ஆனால், இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாகச் செய்ய முடியாது. ஆசிரமத்திடம் தொகையைத் தந்துவிட வேண்டும். இப்படி பலரிடம் இடமாகவும், தொகையாகவும், தங்க நகைகளாகவும் பெற்றதே பல நூறு கோடி ரூபாய் தேறும். பரிகாரமாக இவர்கள் சொன்ன எதையும் ஆசிரமத்தினர் செய்ததில்லை" என்று கொந்தளிக்கிறார்கள் நித்தியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்.

நித்தியானந்தாவின் விவகாரம் வெளியே வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

"எங்களைப் போன்ற பெண் சிஷ்யைகளை, தொழிலதிபர்களைச் சந்திக்க அனுப்புவார் சுவாமிஜி. தொழில் அதிபர்களிடம் நித்தியானந்தாவின் அருமை பெருமைகளைப் பேசி பணத்தைக் கறக்க வேண்டும் என்பதே எங்களுக்குத் தரப்பட்ட அசைன்மென்ட். அப்படி பலரிடமிருந்து பத்து லட்சம் முதல் மூன்று கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளோம்.

சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான். அகமதாபாத் ஆசிரமத்தில் குஜராத் போலீஸார் பறிமுதல் செய்த இரண்டு லேப்டாப்களில் இதுபோன்ற அந்தரங்கமான பல வீடியோக்கள் இருக்கின்றன" என்றார்கள்.

சிஷ்யைகளை வைத்து வலை... சதுரங்க வேட்டையாடிய நித்தி!

நித்தியானந்தா பிடதியில் இருந்தவரை அந்த ஆசிரமத்தில் 25 பெண் சீடர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் 13 பேர் நித்தியின் ஆஸ்தான சிஷ்யைகள். நித்தியானந்தாவுக்கான பணிவிடைகளை அந்தப் பெண் சிஷ்யைகள் மட்டுமே செய்ய வேண்டும். அந்த 13 பேரையும் அழைத்துக் கொண்டுதான் வெளிநாட்டுப் பயணத்தையே மேற்கொண்டுள்ளார் நித்தி. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சில பெண்பக்தைகளும் உடன் இருக்கிறார்கள். தற்போது மூன்று ஆண் சீடர்கள் மட்டுமே நித்தியுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் பிடதி ஆசிரமத்தில் இருப்பவர்கள்.

- 'ஞான அஞ்சனம்'. இந்தப் பெயரை கேட்டாலே அதிர்கிறார்கள் நித்தியானந்தாவிடமிருந்து பிரிந்து வந்தவர்கள். "பல ஆண்டுகளாக எங்களை வசியப்படுத்தி வைத்திருந்ததே இந்த ஞான அஞ்சனம்தான்" என்று சொல்லி நம்மை அதிரவைக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள். 'வசிய மை தடவி வலைக்குள் விழவைத்துவிட்டார்' என்றரீதியில் இருக்கின்றன அவர்கள் சொல்லும் சம்பவங்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > நித்தியின் 'ஞான அஞ்சனம்' - வலைக்குள் விழவைக்கும் வசிய மை https://www.vikatan.com/news/general-news/nityananda-absconding-case-and-his-gnana-anjanam

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு