Published:Updated:

'ஹனி டிராப்' விபரீதம்: பெண் உளவாளி 'வலை'யில் ராணுவ வீரர் சிக்கியதன் பின்னணி!

சில நேரங்களில், ராணுவ ஒத்திகைக் காட்சிகளை வீடியோவாகப் பார்க்க ஆசைப்படுவாள். அதனால், ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற போர் ஒத்திகை நிகழ்வுகள் சிலவற்றை அவளுக்கு வீடியோவாக அனுப்பியுள்ளேன்.

உளவாளி
உளவாளி

'எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் எவரும் ஃபேஸ்புக் பயன்படுத்த வேண்டாம். வாட்ஸப் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் தங்கள் படம், இருப்பிடம் முதலியவற்றை பதிவிட வேண்டாம். பேசுவதற்கு மட்டுமே செல்போன்களைப் பயன்படுத்துங்கள்' - இப்படி ஒரு சுற்றறிக்கையை எல்லைப்பகுதி ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். இந்தச் சுற்றறிக்கையின் பின்னால் ஒளிந்திருப்பது, இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகளை அசைத்துப்பார்க்கும் OSINT (Open Source Intelligence) சாஃப்ட்வேர்தான்! விரிவாக படிக்க க்ளிக் செய்க http://bit.ly/2pYy1YE

ஒடிசாவைச் சேர்ந்த விசித்ர பெஹ்ரா, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவிவர்மா ஆகிய இரண்டு ராணுவ வீரர்களை, நவம்பர் முதல் வாரத்தில் ஜோத்பூர் ரயில்நிலையத்தில் வைத்து ராஜஸ்தான் காவல்துறையினர் கைதுசெய்தனர். பொக்ரான் ராணுவ முகாமில் பணிபுரியும் இந்த இருவர்மீதும், இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

'ஹனி டிராப்' விபரீதம்: பெண் உளவாளி 'வலை'யில் ராணுவ வீரர் சிக்கியதன் பின்னணி!

ரவிவர்மாவைச் சாட்சியாக மாற்றிய போலீஸார், விசித்ர பெஹ்ராவிடம் தொடர்ந்து விசாரித்தனர். ''இரண்டு வருடங்களுக்கு முன், ஃபேஸ்புக் மூலம் ஒரு பெண் பழக்கமானார். ஒருகட்டத்தில், இருவரும் வாட்ஸப் எண்களைப் பறிமாறிக்கொண்டோம். அவ்வப்போது வீடியோகால் மூலமாகப் பேசுவோம். உண்மையிலேயே நான் ஒரு ராணுவ வீரர்தானா என்று அவள் சந்தேகம்கொண்டதால், பொக்ரான் ராணுவ முகாமை வீடியோகாலில் அவளுக்குக் காட்டினேன். அவ்வப்போது நான் பணி செய்யச் செல்லும் இடம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் ரேடார்கள், பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அவளுக்குக் கூறினேன்.

சில நேரங்களில், ராணுவ ஒத்திகைக் காட்சிகளை வீடியோவாகப் பார்க்க ஆசைப்படுவாள். அதனால், ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற போர் ஒத்திகை நிகழ்வுகள் சிலவற்றை அவளுக்கு வீடியோவாக அனுப்பியுள்ளேன். மற்றபடி, நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்று போலீஸ் விசாரணையில் விசித்ர பெஹ்ரா கூறியுள்ளார்.

இரண்டு வருடங்களாக பெஹ்ரா தகவல் அனுப்பியதெல்லாம், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ-யின் பெண் உளவாளிக்குத்தான் என்பது அவருக்கு கடைசிவரை தெரியாமலேயே போய்விட்டது. உளவு அமைப்புகளில் இதை 'ஹனி டிராப்' என்பார்கள். பெண்கள் மூலம் வசியப்படுத்தி தகவல்களைத் திரட்டுவது என இதற்குப் பெயர். சரி... 'ஹனி டிராப்' செய்வதற்கு, விசித்ர பெஹ்ராவை எப்படி ஐ.எஸ்.ஐ அடையாளம் கண்டுகொண்டது? இங்கேதான் ஒளிந்திருக்கிறது OSINT.

'ஹனி டிராப்' விபரீதம்: பெண் உளவாளி 'வலை'யில் ராணுவ வீரர் சிக்கியதன் பின்னணி!

பொக்ரான் ராணுவ முகாமில் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கள், ராணுவ வாகனங்கள் மற்றும் போர் விமானங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவதை விசித்ர பெஹ்ரா வழக்கமாக வைத்திருந்தார். OSINT மூலம் இதைக் கண்டுபிடித்த ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு, பெண் உளவாளி வழியாக அவருக்கு 'ஹனி டிராப்' வலைவிரித்து சிக்கவைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தைக்கூட, ஐ.எஸ்.ஐ-க்குள் இருக்கும் இந்திய உளவாளிகள் மூலம்தான் நம்மவர்கள் தெரிந்துகொண்டார்களாம்.

> 'ஓப்பன் சோர்ஸ் இன்டெலிஜென்ஸ்' என அறியப்படும் OSINT குறித்த விரிவான புரிதலைத் தரும் ஜூனியர் விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > வசியப்படுத்திய பெண் உளவாளி... வலையில் சிக்கிய ராணுவ வீரர்! https://www.vikatan.com/social-affairs/politics/honey-drop-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |