Published:Updated:

சிறார் காக்க சிந்திப்போம்!

சிறார்காக்க சிந்திப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
சிறார்காக்க சிந்திப்போம்!

“குழந்தைகளைத் தவறான பார்வையுடன் அணுகுபவர்களுக்குத் தண்டனை இருக்கிறது என்கிற எச்சரிக்கை உணர்வு வரவேண்டும்.

சிறார் காக்க சிந்திப்போம்!

“குழந்தைகளைத் தவறான பார்வையுடன் அணுகுபவர்களுக்குத் தண்டனை இருக்கிறது என்கிற எச்சரிக்கை உணர்வு வரவேண்டும்.

Published:Updated:
சிறார்காக்க சிந்திப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
சிறார்காக்க சிந்திப்போம்!

சென்னையை மட்டுமல்ல, தமிழகத்தையே அதிரவைத்தது அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் வந்த தீர்ப்பு நீதியை உறுதிசெய்திருக்கிறது. இம்மாதிரியான குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை வரும்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசிக் கடந்துவிடுவதில் அர்த்தமில்லை. அதைத் தடுப்பதற்கான சட்டரீதியான மற்றும் நடைமுறைரீதியான தீர்வுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தண்டனை தரப்பட்ட வழக்குகள்கூட நீர்த்துப் போக வாய்ப்பிருக்கிறது” என்கிறார் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயற்பாட்டாளர் தேவநேயன். “தேனி மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை வழங்கப் பட்டபோதும் குற்றவாளிகள் மேல்முறையீட்டின் அடிப்படையில் வெளியே வந்தார்கள். முகலிவாக்கத்தில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தன் தாயையும் கொன்ற பிறகுதான் வழக்கே வலுவானது. அதுவரை வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.

சிறார்காக்க சிந்திப்போம்!
சிறார்காக்க சிந்திப்போம்!

அதனால் அயனாவரம் வழக்கில் குற்றவாளி களுக்குக் குறைந்தபட்சம் நான்கு ஆயுள்தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டும். குழந்தைக ளுக்கான பாதுகாப்பு விவகாரத்தில் ஏதேனும் குற்றம் நடந்தபிறகுதான் அதில் அனைவரும் ஆஜராகிறார்கள். வருமுன் காப்பதற்கு என்ன செய்கிறோம்? இதற்கான தீர்வு கிராமப் பஞ்சாயத்துகளில் இருக்கிறது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து வாரியாக குழந்தைகள் பாதுகாப்புக்கான குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அண்மையில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கு எனக் கேளிக்கை கிளப்புகள் இருக்கின்றன. ஆனால் எத்தனை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான கமிட்டிகள் இருக்கின்றன? இவற்றை யெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும்” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஒரு குழந்தைக்கு அவர்களது குடியிருப்புப் பகுதியிலேயே விளையாடச் சுதந்திரம் இல்லையென்றால் சமூகத்தின் பாலியல் வக்கிர நோய் அறிகுறி மிகவும் முற்றியிருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் பாலியல் வன்குற்றங்களுக்கு எதிரான நக்‌ஷத்ரா என்னும் அமைப்பை நடத்தி வரும் ஷெரின் பாஸ்கோ.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

“குழந்தைகளைத் தவறான பார்வையுடன் அணுகுபவர்களுக்குத் தண்டனை இருக்கிறது என்கிற எச்சரிக்கை உணர்வு வரவேண்டும். குழந்தை பயந்து பயந்து இருக்கக் கூடாது. தங்கள் குழந்தை அதிகம் சிறுநீர் கழித்தாலோ, வயிற்றுவலி எனச் சொன்னாலோ, கலகலப்பாக இருக்கும் குழந்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலோ, கனவுகளில் பயந்து விழித்துக் கொண்டாலோ, தன்னை யாரேனும் துன்புறுத்துவதாக நேரடியாகச் சொன்னாலோ பெற்றோர்கள் உஷாராக வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்வதை விடுத்து சமூகம் குழந்தைகளுக் கானதாக உருவாக வேண்டும்.முக்கியமாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் போக்ஸோ வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். அதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும்” என்கிறார் அவர்.

பாலியல் குற்றவழக்கு விசாரணைகளில் ஏன் இவ்வளவு தாமதம்? அயனாவரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், “பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப் பட்டவர்கள் புகார் கொடுக்கும் நிமிடம் தொடங்கிதான் அவர்களுக்கான சவாலும் தொடங்குகிறது. துணிந்து புகார் கொடுக்க வருபவர்களைக் காவலர்களே பஞ்சாயத்து பேசித் திருப்பி அனுப்பிவைக்கும் அவலங்கள் நிகழ்கின்றன. அயனாவரம் வழக்கில்கூட விசாரணை தொடங்கிய காலத்திலிருந்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் குழந்தையின் அக்கா, சாட்சி சொல்லவந்த பிறநபர்களை மன உளைச்சல் தரும் வகையில் விசாரணை என்கிற அடிப்படையில் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். 17 பேருக்கும் வழக்கறிஞர்கள் இருந்ததால் ஒரு சாட்சியை விசாரிக்க மூன்று நான்கு நாள்கள் ஆனது. சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு அஞ்சுவதற்கான சூழ்ச்சிகள் நிகழ்ந்தன. அதையும் மீறித்தான் தற்போது வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தண்டனை மேல்முறையீட்டில் நீர்த்துப்போக வாய்ப்பில்லை.மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் குற்றம் நிரூபிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அதனால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை.மற்றபடி, பாதிப்புக்குள்ளான சிறுமியின் பெற்றோர்கள் இந்தத் தீர்ப்பில் தனக்கு முழுத்திருப்தி என்று குறிப்பிட்டுள்ளனர். தங்கள் மகளைப்போன்று வேறு எந்தக் குழந்தைக்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்” என்கிறார்.

குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுத்துவிட்டது நீதிமன்றம். குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும்போதுதான் இந்தத் தேசம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism