Published:Updated:

விபத்தில் பலியான கணவர், கண்களை தானம் தந்த மனைவி; நெகிழ்ச்சி சம்பவம்!

கண் தானம்

வைகுந்தத்தில் இருந்து சங்ககிரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார் பிரபு. பின்னால் வந்த டிப்பர் லாரி, பிரபுவின் இரு சக்கர வாகனத்தில் மோதியது. பலத்த காயமடைந்த பிரபுவை பொதுமக்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விபத்தில் பலியான கணவர், கண்களை தானம் தந்த மனைவி; நெகிழ்ச்சி சம்பவம்!

வைகுந்தத்தில் இருந்து சங்ககிரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார் பிரபு. பின்னால் வந்த டிப்பர் லாரி, பிரபுவின் இரு சக்கர வாகனத்தில் மோதியது. பலத்த காயமடைந்த பிரபுவை பொதுமக்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

Published:Updated:
கண் தானம்

சேலம், சங்ககிரி அருகே உள்ள தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, வேலம்மா வலசு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. பி.இ பட்டதாரியான இவர் அதே பகுதியில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் 5 வயதில் மகனும் உள்ளனர்.

கடந்த வெள்ளியன்று மாலை, வைகுந்தத்தில் இருந்து சங்ககிரி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் பிரபு. ஆவரங்கம்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி, பிரபுவின் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிரபுவை பொதுமக்கள் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரி டிரைவர் பழனிவேல், பச்சாபாளையம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆயில் லோடுடன் நின்றிருந்த லாரி மீது மோதி மற்றொரு விபத்தை ஏற்படுத்திவிட்டார். இந்த விபத்தில் மயக்கம் அடைந்த பழனிவேலுவை மீட்ட போலீஸார், சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவங்கள் குறித்து சங்ககிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வந்த பிரபுவின் மனைவி சந்தியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது சந்தியா, விபத்தில் உயிரிழந்த கணவரின் கண்களைத் தானமாக வழங்க முடிவு செய்து மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ஈரோடு தனியார் கண் மருத்துவமனையினர், சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வந்து பிரபுவின் கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர். விபத்தில் கணவனை இழந்த சூழலிலும், அவரின் கண்கள் பிறருக்கு பயன்பட துரிதமாக முடிவெடுத்து கண்களைத் தானமாக வழங்கிய சந்தியாவின் செயல் அனைவரையுமே நெகிழ வைத்தது.