கேரள மாநிலம், கொல்லத்தில் அண்மையில் கணவனே பாம்பைக் கொண்டு கடிக்கவைத்து, மனைவியைக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் பதறவைத்தது. இதைத் தொடர்ந்து இளம்பெண் ஒருவரை அவரின் கணவரே வாங்கிய கடனுக்காக தன் நண்பர் களைவைத்து பாலியல் வன்கொடுமையில் தள்ளிய கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெயர் வெளியே தெரியக் கூடாது என்ற நோக்கத்தில், குற்றம் சாட்டப்படும் அவரின் கணவரின் பெயரும் மறைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கடினங்குளத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் அவர். இவருக்கு நான்கு மற்றும் இரண்டு வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஜூன் 4-ம் தேதி மாலையில், ‘கடற்கரைக்குக் போகலாம்’ என்று மனைவி மற்றும் குழந்தைகளை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றிருக்கிறார் கணவர். கடற்கரைக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் தன் நண்பனின் வீடு என அங்கிருந்த ராஜன் என்பவரின் வீட்டுக்கு மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுடன் மது அருந்தியவர், மனைவிக்கும் வற்புறுத்தி மது கொடுத்திருக்கிறார். மனைவி மது மயக்கத்தில் இருந்தபோது, கணவர் இரண்டு வயது மகனுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அந்தச் சமயத்தில் கணவனின் நண்பர்களில் ஒருவர், ‘உன் கணவன் வெளியே சிலருடன் தகராறு செய்துகொண்டிருக்கிறார்’ என்று அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். பதறி எழுந்த அந்தப் பெண் தட்டுத்தடுமாறி நான்கு வயது மகனுடன் வீட்டுக்கு வெளியே வந்திருக்கிறார். அப்போது ஆட்டோவில் வந்த நான்கு பேர் அந்தப் பெண்ணையும், நான்கு வயது மகனையும் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மறைவான காட்டுப்பகுதிக்குக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘அந்தப் பெண்ணை அவரின் நான்கு வயது மகனின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப் பெண் மயங்கிப்போகும் அளவுக்குக் கொடூரமாக நடந்துகொண்டிருக்கின்றனர். சிறுவன் அழுததால், அவனையும் தாக்கியிருக்கிறார்கள். மகனின் அழுகையைக் கேட்டு மயக்கம் தெளிந்த அந்தப் பெண், கதறியபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு ஓடிவந்திருக்கிறார். அந்த வழியே சென்ற ஒரு காரை நிறுத்தி, தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியிருக்கிறார். காரிலிருந்த இளைஞர்கள் அவர்களை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள்.

அதன் பிறகுதான் இரண்டாவது மகனுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார் அந்தப் பெண்ணின் கணவர். ‘போலீஸில் புகார் கொடுக்கக் கூடாது’ என மனைவியை மிரட்டியிருக்கிறார். இதற்கிடையில், அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய இளைஞர்கள் கடினங்குளம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட, அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்றது போலீஸ். அரை மயக்கத்திலிருந்த அந்தப் பெண்ணை மீட்டு, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பெண்ணின் முகம் மற்றும் உடலில் பல் தடம், நகக்கீறல்கள் பதிந்திருந்தன.

மயக்கம் தெளிந்த பிறகு விசாரணை நடத்தினோம். அந்தப் பெண்ணின் கணவர், அவரது நண்பர் ஒருவரிடமிருந்து பணத்தைக் கடன் வாங்கியிருக்கிறார். அதை ஈடுகட்டவே மனைவியை நண்பரின் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணின் நான்கு வயது மகன்தான் சம்பவத்துக்கு ஒரே சாட்சி. இந்த வழக்கில் பெண்ணின் கணவன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனைத் தாக்கியதால் நான்கு பேர்மீது போக்ஸோ வழக்கும் போடப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மன்சூர், அக்பர்ஷா, அர்ஷாத், ராஜன், மனோஜ், அன்ஸார், ஆட்டோ டிரைவர் நௌஃபல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கொல்லம் அஞ்சல் பகுதியில் சூரஜ் என்பவர், தன் மனைவி உத்ராவை பாம்பைக்கொண்டு கடிக்கவைத்து கொலை செய்த சம்பவம் நடந்தது. இப்போது இந்தக் கொடூரம். இது குறித்து கேரளத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் தன்யா ராமன் நம்மிடம், ‘‘112 பவுன் நகை, கார், 15 லட்சம் ரூபாய் என வரதட்சணைப் பணத்துக்காக திருமணம் செய்து கொண்ட மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார் சூரஜ். திருவனந்தபுரம், கடினங்குளம் சம்பவத்தில் கணவன் வாங்கிய கடனுக்கான பணத்துக்காக மனைவியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக் கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள். வறுமை காரணமாக 18 வயதிலேயே அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். இதனால், கணவனை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சம உரிமையும் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையும் இருந்தால்தான் இது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்’’ என்றார்.