Published:Updated:

மனைவியைக் கொன்று, வீட்டு முற்றத்தில் புதைத்துவிட்டு நாடகம்... ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு சிக்கிய கணவன்

சஜீவன் - ரம்யா

`அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார். அதை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என்பதால், பெங்களூருக்குப் படிக்கப்போயிருப்பதாக வெளியில் சொல்ல வேண்டும்.’ - குழந்தைகளிடம் சஜீவன்

மனைவியைக் கொன்று, வீட்டு முற்றத்தில் புதைத்துவிட்டு நாடகம்... ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு சிக்கிய கணவன்

`அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார். அதை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என்பதால், பெங்களூருக்குப் படிக்கப்போயிருப்பதாக வெளியில் சொல்ல வேண்டும்.’ - குழந்தைகளிடம் சஜீவன்

Published:Updated:
சஜீவன் - ரம்யா

கேரள மாநிலம், கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் சஜீவன் (45). இவர் தன்னுடைய மனைவி ரம்யா (35) காணாமல்போனதாகக் கடந்த மாதம் போலீஸில் புகாரளித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ரம்யாவை அவரின் கணவன் சஜீவன் கொலைசெய்து புதைத்துவிட்டு காணாமல்போனதாக நாடகமாடியது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "சஜீவனுக்கும் ரம்யாவுக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மனைவி ரம்யாவின் நடத்தையில் சஜீவனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக மனைவி ரம்யாவிடம் 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16-ம் தேதி வாக்குவாதம் செய்திருக்கிறார் சஜீவன். வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த சஜீவன், கயிற்றால் ரம்யாவின் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்திருக்கிறார். பகல் நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்தக் கொலை நடந்ததால், அவரின் உடலை வீட்டில் மறைத்துவைத்திருக்கிறார்.

பின்னர், இரவு நேரத்தில் வீட்டு முற்றத்தில் குழிதோண்டி மனைவியின் உடலைப் புதைத்திருக்கிறார். தன்னுடைய அம்மாவைத் தேடிய குழந்தைகளிடம், `அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார். அதை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என்பதால், பெங்களூருக்குப் படிக்கப்போயிருப்பதாக வெளியில் சொல்ல வேண்டும்’ எனவும் கூறி பிள்ளைகளை நம்பவைத்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட சஜீவன்
கைதுசெய்யப்பட்ட சஜீவன்

இந்த நிலையில், `ரம்யா எங்கே?’ என அவரின் உறவினர்களும் கேட்டிருக்கின்றனர். அதற்கு, பியூட்டீஷியன் படித்திருக்கும் ரம்யா பெங்களூருவில் படிக்கப்போனதாகவும், அங்கிருந்து வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் கூறிச் சமாளித்திருக்கிறார். ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆன பின்னரும் ரம்யா யாரிடமும் போனில்கூட பேசவில்லை, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாததால், உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சஜீவனிடம் அவரின் மனைவி பற்றிக் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

இதனால், `மனைவி ரம்யாவுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்’ என உறவினர்களிடம் கூறியதுடன், அவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தார். கொச்சியிலிருந்து இரண்டு பெண்களை பத்தனம்திட்டாவுக்கு அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவத்துக்குப் பிறகு காணாமல்போன பெண்கள் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினோம்.

ரம்யா சஜீவன்
ரம்யா சஜீவன்

அதன்படி ரம்யா குறித்து அவரின் குழந்தைகளிடமும், கணவர் சஜீவனிடமும் விசாரணை நடத்தினோம். அதில் எங்களுக்குச் சில சந்தேகங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கணவன் சஜீவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். ரம்யாவின் உடலைத் தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சஜீவனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.