Published:Updated:

சென்னை: திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட நட்பு! - மனைவியின் ஆண் நண்பரைக் கொலை செய்த கணவர்

சென்னையில் மனைவியின் ஆண் நண்பரைக் கொலை செய்த கணவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகேயுள்ள, பாடியநல்லூர் ஊராட்சி பெரியார் நகரில் நவீன அரிசி ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு ஒடிசா மாநிலம் நபராம்பூரைச் சேர்ந்த ராகுல் (26) என்பவரும், அவருடைய மனைவி பூஜாவும் (24) குடும்பத்துடன் தங்கி வேலை செய்துவந்தனர்.

இதே அரிசி ஆலையில் ஒடிசா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா (28) என்பவரும் வேலை செய்துவந்தார். ஒரே அரிசி ஆலையில், ஒரே மாநிலத்தைச் சோந்த மூன்று பேரும் வேலை செய்த சூழ்நிலையில் ராகுலின் மனைவி பூஜாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அதை ராகுல் தவறாகக் கருதவில்லை. ஆனால், இருவரும் பழகிய விதம் ராகுலுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் தன் மனைவியையும், கிருஷ்ணாவையும் ராகுல் கண்டித்தார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகிவந்தனர்.

கொலை
கொலை

இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராகுல், கத்தியால் கிருஷ்ணாவைக் குத்திக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்துத் தகவலறிந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தலைமறைவான ராகுலை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் செங்குன்றம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு