Published:Updated:

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்? - இருவர் கைது... விழுப்புரத்தில் அதிர்ச்சி

கைது

மது போதையில் வந்த கணவனுடன், மனைவிக்கு ஏற்பட்ட பிரச்னையின் தொடர்ச்சியாக... மனைவியை கணவனே தீ வைத்து எரித்திருப்பதாக கூறப்படும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்? - இருவர் கைது... விழுப்புரத்தில் அதிர்ச்சி

மது போதையில் வந்த கணவனுடன், மனைவிக்கு ஏற்பட்ட பிரச்னையின் தொடர்ச்சியாக... மனைவியை கணவனே தீ வைத்து எரித்திருப்பதாக கூறப்படும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கைது

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (44). துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் இவருக்கும், பரமேஸ்வரி (38) என்ற பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணமானது. அப்போது, பரமேஸ்வரியின் குடும்பத்தார் சீர் வரிசையுடன் 3 சவரன் நகையை போட்டு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். மேலும், வரதட்சணையாக ரஞ்சித்குமாருக்கு பைக் வாங்கித் தருவதாகக் கூறியிருந்தனராம். ஆனால், அவர்களால் அதை வாங்கித் தரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது.

விழுப்புரம்
விழுப்புரம்

இதையடுத்து ரஞ்சித்குமாரும், அவர் தயார் ராணியும் இதனைச் சுட்டிக்காட்டி, கூடுதலாக வரதட்சணை பெற்றுவரும்படி பரமேஸ்வரியிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி மது அருந்துவதற்காக மனைவி பரமேஸ்வரியிடம் 500 ரூபாய் கேட்டிருக்கிறார் ரஞ்சித்குமார். ஆனால், மது அருந்துவதற்கு பணத்தை தர பரமேஸ்வரி மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரஞ்சித்குமார், தன் தாயாரிடம் 500 ரூபாயை வாங்கிக்கொண்டு மதுபானக்கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

அப்போது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பரமேஸ்வரி எதிர்த்துப் பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், மனைவி பரமேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி, புதுவை ஜிப்மர் மருத்துவமனையைத் தொடர்ந்து சென்னையிலுள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவன் மனைவி தகராறு
கணவன் மனைவி தகராறு
மாதிரி படம்

இது தொடர்பான புகாரின் பேரில், 498(a), 307 ipc ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் விழுப்புரம் தாலுகா போலீஸார் ரஞ்சித்குமார், அவர் தாய் ராணியைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.