Published:Updated:

கடலூர்: சகோதரனால் கர்ப்பம்; கழிவறையில் பிரசவம் - பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய ப்ளஸ் ஒன் மாணவி

குழந்தையைப் புதரில் வீசிய மாணவி

அரசுப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக் கழிவறையில் குழந்தையைப் பிரசவித்து, அதைப் புதரில் வீசிச் சென்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: சகோதரனால் கர்ப்பம்; கழிவறையில் பிரசவம் - பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய ப்ளஸ் ஒன் மாணவி

அரசுப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக் கழிவறையில் குழந்தையைப் பிரசவித்து, அதைப் புதரில் வீசிச் சென்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
குழந்தையைப் புதரில் வீசிய மாணவி

கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்திருக்கும் அரசுப் பெண்கள் மாதிரிப் பள்ளியில், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி வழக்கமான பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவிகள் கழிவறைக்குச் சென்றனர். அப்போது கழிவறைக்கு அருகில் இருந்த முள்புதரில் எறும்புகள் சூழ பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் புவனகிரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தது. அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பிறகு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அந்தக் குழந்தை குறித்து விசாரணையை மேற்கொண்டுவந்தனர். அந்த விசாரணையில் அதே பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவரும் மாணவிக்குப் பிறந்த குழந்தைதான் அது என்பதும், அவர்தான் அந்தக் குழந்தையை புதரில் வீசினார் என்பதும் தெரியவந்திருக்கிறது.

புதரில் வீசப்பட்ட குழந்தை சடலமாக
புதரில் வீசப்பட்ட குழந்தை சடலமாக

இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகளில் ஒருவர், “16 வயதான அந்த மாணவி, பத்தாம் வகுப்பு படித்துவரும் தனது சித்தப்பா மகனுடன் நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்தாலும், அக்கா, தம்பி என்பதால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் நெருங்கிப் பழகியதன் விளைவாக அந்தச் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று தெரிந்தாலும், அதைத் தனது வீட்டில் சொல்லாமல் மறைத்து வழக்கம்போல பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சோர்வாக இருந்த அந்த மாணவி, வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் படுத்தே இருந்திருக்கிறார். அதன் பிறகுதான் கழிவறைக்குச் சென்று குழந்தையை அவரே பிரசவித்திருக்கிறார். பிறகு அதை அருகிலிருந்த முள் புதரில் வீசியெறிந்திருக்கிறார். மாணவியிடமும், அந்தச் சிறுவனிடமும் விசாரணை செய்துவருகிறோம். அந்த மாணவி மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்துவருகிறார். விசாரணை முடிந்தவுடன்தான் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியவரும்” என்றார்.