Published:Updated:

கடலூர்: பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - மூன்று சிறுவர்கள் கைது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டிவைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்களை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது கடலூர் மாவட்ட காவல்துறை.

கடலூர்: பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - மூன்று சிறுவர்கள் கைது

பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டிவைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்களை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது கடலூர் மாவட்ட காவல்துறை.

Published:Updated:
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி சரண்யா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் டூ மாணவர் ஒருவரைக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மே 22-ம் தேதி அந்த ப்ளஸ் டூ மாணவருக்குப் பிறந்தநாள் என்பதால், அதை நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறார். அப்போது மாணவி சரண்யாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார் அந்த ப்ளஸ் டூ மாணவர். அதேபோல அந்த விழாவில் கலந்துகொண்ட 10-ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களும் அதைப் புகைப்படமாக எடுத்திருக்கின்றனர்.

அதன் பின்னர், ``இந்த போட்டோவையும் வீடியோவையும் உன் அப்பா, அம்மாவிடம் காட்டிவிடுவோம்” என்று மாணவியை அவ்வப்போது மிரட்டிவந்திருக்கின்றனர் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மூன்று மாணவர்கள். இந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி பள்ளிக்கு வந்திருந்த மாணவியை மிரட்டி, ஒரு மாணவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

கைது
கைது

அங்கு அந்த மாணவியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி, அந்த மூன்று மாணவர்களும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அத்துடன் அதை செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து, ``வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை வெளியில் விட்டுவிடுவோம்’’ என்றும் மிரட்டியிருக்கின்றனர்.

அதனால் பயந்துபோன அந்தச் சிறுமி நடந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த அவர் தன் உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து ஆவினங்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததன் அடிப்படையில், அந்த மூன்று மாணவர்களையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது காவல்துறை. மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு மருத்துவப் பரிசோதனைக்கும் பரிந்துரைத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும், மாணவர்களும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதி மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!