Published:Updated:

மதுரை: மகன் கொலை - தந்தை கைது! மதுவால் திருமணவீடு துக்கவீடான சோகம்!

Murder
Murder ( Representational image )

வாடிப்பட்டி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி வட்டாரத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலையான பிரதீப்
கொலையான பிரதீப்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யனகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி இளங்கோவனின் இளைய மகன் பிரதீப்புக்கும் உசிலம்பட்டி அருகேயுள்ள உறவினர் வீட்டுப் பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய ஏற்படாகியிருந்தது.

திருமண வேலைகளில் இளங்கோவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், வெளியே சென்றுவிட்டு நேற்று மாலை மது குடித்துவிட்டு நிதானமில்லாமல் வீட்டுக்கு வந்துள்ளார் மணமகனான பிரதீப்.

மது
மது
Representational Image

தன் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் மது குடிக்க தந்தை இளங்கோவனிடம் பணம் கேட்டுள்ளார் பிரதீப். "நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி அசிங்கப்படுத்துகிறாயே!" என்று தந்தை கடுமையாகத் திட்டியுள்ளார்.

"பணம் தரவில்லையென்றால் திருமணம் செய்ய மாட்டேன்!" என்று கூற பதிலுக்கு இளங்கோவன் வாக்குவாதம் செய்ய போதை தலைக்கேறிய நிலையில் தந்தையுடன் சண்டை போட்டுள்ளார் பிரதீப்.

இளங்கோவன்
இளங்கோவன்

இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில், தன்னை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்த கோடாரியை எடுத்து இளங்கோவன் வெட்டியதில், பிரதீப்பின் கழுத்தில் ஆழமாகப் பட்டு அங்கேயே மரணமடைந்தார்.

என்ன நடக்கிறது என்பதை மற்றவர்கள் உணரும் முன்பே வாக்குவாதம் கொலையில் நடந்து முடிந்தது. இதனால் திருமண வீடே கண்ணீரும் கதறுலுமாக மாறியது.

மதுக்கடை (பைல் படம்)
மதுக்கடை (பைல் படம்)

சற்று நேரத்துக்கு முன்பு வரை மகன் திருமணத்துக்கான வேலைகளை செய்துகொண்டிருந்த இளங்கோவன் அதே மகனை கொலை செய்த கொலைகாரராகிப் போனார். வாடிப்பட்டி காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். மதுவால் பல மோசமான சம்பவங்கள் நாட்டில் நடந்து வரும் நிலையில் மதுவின் தீமை மற்றவர்களை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்கள் மதுவுக்கு எதிரான ஆர்வலர்கள்.

சி.ஜே.ராஜன்
சி.ஜே.ராஜன்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுவுக்கு எதிராக பரப்புரை செய்து வரும் நாட்டை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜே.ராஜன்.
''தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் இருக்கும் பல குடும்பங்களின் நிம்மதியை மது அழிக்கறது. பல்வேறு குற்றங்கள் நடைபெற மதுவே காரணமாக உள்ளது" என்றார்

அடுத்த கட்டுரைக்கு