Published:Updated:

வியாபாரியிடம் 10 லட்ச ரூபாய் வழிப்பறி; மதுரை இன்ஸ்பெக்டர் கோத்தகிரியில் கைது!

இன்ஸ்பெக்டர் வசந்தி
இன்ஸ்பெக்டர் வசந்தி

மதுரையில் வியாபாரியிடம் 10 லட்ச ரூபாயை இன்ஸ்பெக்டர் வசந்தி ஆட்களைவைத்து வழிப்பறி செய்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

வியாபாரியிடம் 10 லட்ச ரூபாய் பணத்தைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தி இன்று கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்து அழைத்து வந்தபோது...
கைதுசெய்து அழைத்து வந்தபோது...

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார். தனது வியாபாரத்துக்கான பொருள்களை வாங்க கடந்த ஜூலை 5-ம் தேதி 10 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரை வந்திருக்கிறார்.

தெரிந்த நபரிடம் கடன் வாங்குவதற்காக மதுரை நாகமலை புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார். அப்போது வாகனத்தில் வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி, பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துச்சென்றிருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் வசந்தி
இன்ஸ்பெக்டர் வசந்தி

காவல் நிலையத்துக்குச் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு, இன்ஸ்பெக்டர் வசந்தி அர்ஷத்தை `பொய் வழக்கு பதிவு செய்துவிடுவேன்’ என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து மதுரை எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தார் அர்ஷத். மோசடி நடந்தது உண்மையென்று உறுதிசெய்யப்பட்டதால் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த மாதம் 27-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி ஆகியோர் கொண்ட தனிப்படை குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியது. இதில் இன்ஸ்பெக்டர் வசந்தியுடன் சேர்ந்து வழிப்பறி செய்த பால்பாண்டி, உக்கிரபாண்டி, கார்த்திக் என்ற சீமைச்சாமி மூவரையும் கடந்த 10-ம் தேதி கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ 2,26,000 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் வசந்தி
இன்ஸ்பெக்டர் வசந்தி

இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமறைவாக இருந்துகொண்டு நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற முயன்றுவந்தார். வசந்தியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், `ஏன் இன்னும் முக்கிய குற்றவாளியான இன்ஸ்பெக்டரைக் கைது செய்யவில்லை?’ என்று கேள்வி எழுப்பியது.

அதைத் தொடர்ந்து வேகமெடுத்த தனிப்படையினர், வசந்தியின் சொந்த ஊரான உசிலம்பட்டி வீட்டையும், தங்கியிருந்த மதுரை தல்லாகுளம் காவல்துறை குடியிருப்பிலும் தொடர்ந்து கவனித்துவந்தனர். அலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தபோது அவர் கோத்தகிரியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்த தனிப்படையினர், விடுதியில் தங்கியிருந்த அவரைக் கைதுசெய்து மதுரைக்கு அழைத்துவந்தனர்.

மதுரை: சீட்டிங் கும்பலுடன் சேர்ந்து பணம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர்! - அதிரடிகாட்டிய எஸ்.பி
நீதிமன்றம் வந்தபோது
நீதிமன்றம் வந்தபோது

இது மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் வசந்தி மீது பல்வேறு மோசடிப் புகார்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. `அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்’ என்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வசந்தியை செப்டம்பர் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு