Published:Updated:

மனைவிமீது சந்தேகம்; பெட்ரோல் ஊற்றித் தானும் தீக்குளித்த கணவன்!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைத் தீவைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவன், தன்மீதும் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகேயுள்ள தாந்தோணி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கட்டட வேலை செய்துவந்த சங்கருக்கு 48 வயது. இவுரின் முதல் மனைவி பொம்மி புற்றுநோய் பாதிப்பால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முதல் மனைவிக்குப் பிறந்த ஒரு மகன், ஒரு மகள் பெங்களூருவில் தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், அலமேலு என்பவரை சங்கர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அலமேலுவுக்குத் தற்போது 45 வயதாகிறது. இரண்டாவது மனைவிக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. தினமும் வேலைக்குச் செல்லும் அவர் மாலையில் மதுபோதையில்தான் வீடு திரும்புவாராம். வீட்டுச் செலவுக்கும் பணம் தராமல் இருந்ததால் மனைவி அலமேலு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

`பாம்பின் தலையைப் பிடித்து மனைவியை கடிக்க வைத்துள்ளார்'- கேரள கொலையில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு!
தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

அப்போதெல்லாம் மனைவியை அடிப்பது போன்ற செயல்களில் சங்கர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகராறும் நீடித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மனைவி அலமேலுவைத் தாக்கிய சங்கர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, சங்கரும் தற்கொலை செய்துகொள்வதற்காகத் தீக்குளித்திருக்கிறார். இருவரும் அலறித் துடித்திருக்கின்றனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக இரண்டு பேரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சங்கர் இறந்துவிட்டார். அலமேலுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து நெமிலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு