Published:Updated:

ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்; முன்னாள் ராணுவ வீரருக்கு 3 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம்

போக்சோ

ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சென்னை ஆவடி பூம்புழல்நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். முன்னாள் ராணுவ வீரரான இவர். கடந்த 2018-ம் ஆண்டு கோவையிலிருந்து சென்னைக்குச் சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதே ரயிலில் கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமியும்ம் அவரின் தாயும் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது முன்னாள் ராணுவ வீரரான மகேஸ்வரன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் அவரைப் பிடித்து சேலம் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனர். சேலம் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை செய்ததன் அடிப்படையில் மகேஸ்வரன் மீது வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.

ரயில்
ரயில்

இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, முன்னாள் ராணுவ வீரர் மகேஸ்வரனுக்கு மூன்று ஆண்டுச் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தற்போது மகேஸ்வரன் கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருவதாகக் கூறப்படுகிறது.