Published:Updated:

திருவண்ணாமலை: தொடக்கப்பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர்

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்த, தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை: தொடக்கப்பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்த, தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள தாங்கல் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக காளியப்பன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் விளைவாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், இம்மாதம் துவக்கத்திலிருந்து திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த காளியப்பன், சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி தலைமையாசிரியர் தங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பற்றி பெற்றோர்களிடம் அழுதபடி சென்று கூறியுள்ளனர் சிறுமியர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள், நேற்று முன்தினம் காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

போக்சோ - சித்தரிப்பு படம்
போக்சோ - சித்தரிப்பு படம்
விகடன்

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர்கள், வட்டார கல்வி அலுவலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இச்சம்பவம் தொடர்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த விசாரணையில், தலைமையாசிரியர் காளியப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் அவர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட ஒரு பள்ளி மாணவியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், தலைமையாசிரியர் மீது போக்சோ உட்பட 2 சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போளூர் - அனைத்து மகளிர் காவல் நிலையம்
போளூர் - அனைத்து மகளிர் காவல் நிலையம்

பள்ளிச் சிறுமிகளுக்கு தலைமையாசிரியரே பாலியல் தொல்லை அளித்திருப்பதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அப்பள்ளிக்கு மாற்றுப் பள்ளியிலிருந்து தற்காலிகமாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு, வகுப்புகள் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism