Published:Updated:

வாணியம்பாடி: `டைம்பாஸுக்காகப் பழகினேன்!’ - பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தற்கொலை
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

வாணியம்பாடியில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி, அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவந்தார். கடந்த 19-ம் தேதி வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மூன்று நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலிருக்கும் ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துகொண்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் வாணியம்பாடி நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

தூக்கு
தூக்கு

அதே பகுதியில் வசித்துவரும் 19 வயதான கல்லூரி மாணவன் ஒருவரும், தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியும் காதலித்துவந்திருக்கிறார்கள். மாணவியுடன் மிக நெருக்கமாகப் பழகிய மாணவன், திடீரென பேசுவதைத் தவிர்த்துவந்திருக்கிறார். ஒருகட்டத்தில், `இனிமேல் என்கிட்ட பேசாதே. நான் உன்னைக் காதலிக்கவில்லை. டைம்பாஸுக்காகத்தான் பழகினேன்’ என்று மாணவன் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். செல்போன் பதிவுகளைவைத்து, மாணவியைத் தற்கொலைத் தூண்டிய வழக்கில் மாணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு