Published:Updated:

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வேலூர் சிறுமி! - போக்சோவில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் அருகேயுள்ள புதுப்பாளையம், கொடுமாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் என்கிற தங்கராஜ். வயது 29. இவர், 2013-ல் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. `இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று சிறுமியை தங்கராஜ் மிரட்டியிருக்கிறார். அச்சமடைந்த சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம்கூட சொல்லாமல் மறைத்திருக்கிறார். சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்திருக்கிறார்கள். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரித்திருக்கிறார்.

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கராஜ்
சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கராஜ்

இது குறித்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரளிக்கும்போது, சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் தங்கராஜைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட `போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு வழங்கினார். தங்கராஜ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, வேலூர் மத்தியச் சிறையில் தங்கராஜ் அடைக்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு