Published:Updated:

அதிகரிக்கும் ஆர்.டி.ஐ கொலைகள்!

ஆர்.டி.ஐ கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.டி.ஐ கொலைகள்

‘டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ன ஆச்சு?

அதிகரிக்கும் ஆர்.டி.ஐ கொலைகள்!

‘டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ன ஆச்சு?

Published:Updated:
ஆர்.டி.ஐ கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.டி.ஐ கொலைகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தகவல்களைக் கேட்கும் ஆர்வலர்கள் பலர் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால், பல உயிர்கள் பறிபோவதுகுறித்து அரசு மெளனம் காப்பதாகக் குமுறுகின்றனர் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்.

2010-ம் ஆண்டு கெளரவ் அகர்வால் என்பவர் ‘ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுவது குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் 2011 மார்ச் 1-ம் தேதி, மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கே.கே.பதாக், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், `ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை ஒவ்வொரு மாநிலமும் உறுதிசெய்ய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, 2013 ஜூன் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுரேஷ்குமார், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்விதமாக மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சி அமைச்சகம், 2011 மே மாதம் `டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைத்துள்ளது. இதன்மூலம் ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 4-ன்படி இதைச் செய்திருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காவல்துறை மற்றும் பொது உத்தரவு ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலில் இருப்பதால், மாநிலங்கள் டாஸ்க் ஃபோர்ஸை அமைக்க வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த இரண்டு கடிதங்களின் அடிப்படையில், தேனியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன், தமிழகத்தில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டதற்கான தகவல்களை 2019 செப்டம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலகத்திடம் கேட்டுள்ளார். அவருக்கு என்ன பதில் கிடைத்தது? ராமகிருஷ்ணனே சொல்கிறார்...

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

‘‘நான் ஒரு ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர். ஆர்.டி.ஐ மூலமாக தகவல் கேட்டதற்கு, எங்கள் பகுதியில் உள்ளவர்களாலேயே தாக்கப் பட்டுள்ளேன். தொடர் மிரட்டல் களுக்கும் ஆளாகியுள்ளேன். இதற்கு ஒரு தீர்வு கிடையாதா எனத் தேடியபோதுதான் டாஸ்க் ஃபோர்ஸ் பற்றிக் கேள்விப்பட்டேன். அது தொடர்பான தகவல்களைச் சேகரித்து, தமிழக தலைமைச் செயலகத்தில் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டேன். அதில், ‘தமிழகத்தில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டதற்கான ஆணை, அதில் யாரெல்லாம் பணியாற்றுகின்றனர், எப்போதிலிருந்து செயல்பட்டுக்கொண்டிருக் கிறது, இதன்மூலம் எத்தனை ஆர்.டி.ஐ ஆர்வலர்களிடமிருந்து புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்...’ என மொத்தம் 11 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

2019 அக்டோபர் 25-ம் தேதி, தலைமைச் செயலகத்திலிருந்து எனக்கு பதில் கடிதம் வந்தது. அதில், ‘உள்துறை அமைச்சகத்தில் உங்களுக்கான பதில்களைக் கொடுப்பார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. காத்திருந்தேன். அங்கிருந்து பதில் எதுவும் வராததால், உள்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலருக்கு மேல்முறையீடு செய்தேன். 2019 டிசம்பர் 11-ம் தேதி எனக்கு பதில் வந்தது. அதில், ‘மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த கடிதம் தொடர்பான எந்த ஆவணங்களும் இங்கு இல்லை. இதில் கேட்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கு காவல்துறை தலைவர் பதில் கொடுப்பார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை தலைவரிடமிருந்து காவல்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அந்தக் கடிதம் மாற்றப்பட்டது. கடைசியாக பிப்ரவரி 12-ம் தேதி, ‘டாஸ்க் ஃபோர்ஸ் சம்பந்தமான எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை’ என்று காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைத்தது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இரண்டு முறை கடிதம் அனுப்பியுள்ளது. ‘அந்தக் கடிதம் எங்களிடம் இல்லை’ என்று கூறுகிறார்கள் என்றால், என்னைப் போன்ற ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்களுக்கு இந்த அரசு எப்படிப் பாதுகாப்பு கொடுக்கும்? இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். மத்திய அரசு அறிவுறுத்திய டாஸ்க் ஃபோர்ஸை தமிழகத்தில் அமைக்கும் வரை விடப்போவதில்லை’’ என்றார் கொதிப்புடன்.

கவனம் செலுத்துமா தமிழக அரசு?

டாஸ்க் ஃபோர்ஸின் வேலை என்ன?

கவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 4-ன்படி, அனைத்து அரசுத் துறைகளும் அமைச்சகங்களும் தங்களது ஒட்டுமொத்தப் பணிகளையும் தரவுகளையும் மக்கள் தளத்தில் (Public Domain) வெளிப்படைத்தன்மையோடு பகிர வேண்டும். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. அமைக்கப்படும் டாஸ்க் ஃபோர்ஸின் வேலைகளில், இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 4-ஐ முழுவதுமாகச் செயல்படுத்துவது மிக முக்கிய வேலையாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவித ஒளிவுமறைவுமின்றி அரசுத் துறைத் தகவல்கள் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிட்டால், ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் யாரும் தாக்கப்பட மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. அதுவே டாஸ்க் ஃபோர்ஸின் நோக்கமும்கூட!

இந்த டாஸ்க் ஃபோர்ஸில் யாரெல்லாம் இருக்க வேண்டும்... எப்படிச் செயல்பட வேண்டும்? துறைவாரியாகவோ அல்லது மாநிலம் முழுவதுக்குமான பொதுவான அமைப்பாகவோ உருவாக்கலாம். இவை அனைத்தையும் மாநிலங்கள் முடிவுசெய்துகொள்ளலாம். தமிழகம் மட்டுமல்ல, இதுவரை இந்தியாவின் எந்த மாநிலமும், இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்கான சிறு முயற்சிகூட எடுக்கவில்லை.