Published:Updated:

`இன்ஸ்டாகிராம் காதல்; மாயமான கல்லூரி மாணவி!’ - வேலூரில் பரிதவிக்கும் பெற்றோர்

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

இன்ஸ்டாகிராம் காதலனைக் கரம் பிடிக்க வீட்டிலிருந்து வெளியேறிய வேலூர் கல்லூரி மாணவியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

வேலூரைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி ஒருவர், தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். அவருக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற அந்த மாணவி, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

பதறிப் போன பெற்றோர் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தனர். தோழிகளும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி மறைத்துள்ளனர். வேலூரில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன.

அப்படியான அச்சத்தில் உறைந்துபோன பெற்றோர் நேரத்தை வீணாக்காமல் வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

வேலூர் வடக்கு காவல் நிலையம்
வேலூர் வடக்கு காவல் நிலையம்

விசாரணையில், மாயமான மாணவி இன்ஸ்டாகிராம், டிக்டாக், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் `சேட்டிங்’ செய்ய ஆரம்பித்தனர். பொதுவான தகவல்களையும் செல்போன் நம்பர்களையும் பகிர்ந்துகொண்டனர். அதன்பிறகு, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இன்ஸ்டாகிராம் காதல் குறித்து தன் பெற்றோரிடம் மாணவி கூறவில்லை.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

இதையறியாத பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால், காதலனைத் தேடி அந்த மாணவி ஈரோட்டுக்குச் சென்றது தெரியவந்துள்ளது. மாணவி இப்போது எங்கு இருக்கிறார்? என்று போலீஸார் தேடி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு