Published:Updated:

`8 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை’ - தனியார் பேருந்து நிறுவன விவகாரத்தில் கொதிக்கும் மக்கள்

முற்றுகைப் போராட்டத்தில் முதலீட்டாளர்கள்

லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி, பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் பஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது.

`8 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை’ - தனியார் பேருந்து நிறுவன விவகாரத்தில் கொதிக்கும் மக்கள்

லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி, பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் பஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது.

Published:Updated:
முற்றுகைப் போராட்டத்தில் முதலீட்டாளர்கள்

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ‘ராஹத்’ எனும் தனியார் பேருந்து டிராவல்ஸ் நிறுனத்தை நடத்திவந்தார். இவர் `எங்களது நிறுவனத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கான பங்குகள் கொடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். அதையடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். சொன்னபடியே லாபத்தில் உரிய பங்கை முதலீட்டாளர்களுக்கு மாதம்தோறும் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் கொடுத்துவந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஹத் நிறுவனத்தின் உரிமையாளரான கமாலுதீன் இறந்துபோயிருக்கிறார். அதிலிருந்துதான் ஆரம்பித்தது சிக்கல்.

முற்றுகைப் போராட்டத்தில் முதலீட்டாளர்கள்
முற்றுகைப் போராட்டத்தில் முதலீட்டாளர்கள்

கமாலுதீன் இறந்த பிறகு மாதம்தோறும் முறையாக பணம் வந்து சேராததாலும், அவரின் குடும்பத்தினர் சரியாக பதில் சொல்லாமல் இழுத்தடித்ததாலும் முதலீட்டாளர்கள் கொதித்துப்போயினர். இதற்கிடையே ஒரே பேருந்துக்கு பலரிடம் முதலீட்டைப் பெற்றிருப்பதும், அப்படி வாங்கிய பேருந்துகளை வங்கியில் வைத்து கடன் வாங்கியிருப்பதும் தெரிந்து முதலீட்டாளர்கள் அதிர்ந்துபோயினர். அதையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்தன. இந்நிலையில், ‘புகார் கொடுத்து எட்டு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என பாதிக்கப்பட்டவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருச்சி மன்னார்புரத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புகார் கொடுக்க வந்த முதலீட்டாளர்கள்
புகார் கொடுக்க வந்த முதலீட்டாளர்கள்

அப்போது, `ராஹத் நிறுவனத்தின்மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இதுவரை அவர்களின் குடும்பத்தாரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ராஹத் நிறுவனத்துக்கு பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகள் இருக்க, அவற்றை இதுவரை முடக்காதது ஏன்... ராஹத் நிறுவனத்தின் சொத்துகள் வரிசையாக விற்கப்பட்டுவருகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சுமார் 700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உடனே அவர்களுடைய பணத்தைத் திரும்ப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கொந்தளித்தனர். `விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் கேட்டுக்கொண்ட பின்னரே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள் கலைந்து சென்றனர்.