Published:Updated:

திருவாரூர்: ``சுடுகாட்டிலும் இடம் தரக் கூடாது” - குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தாரா நாட்டாமை?!

திருவாரூர்
News
திருவாரூர்

குடும்பச் சண்டையைப் பொதுவெளியில் போட்டுக்கொண்டதால் ஊர்ப் பெயர் கெட்டுவிட்டதாகக் கூறி, பஞ்சாயத்துதாரர்கள் கூடி ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், துண்டுப்பிரசுரம் அச்சடித்து பொது இடங்களில் போட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

திருவாரூர்: ``சுடுகாட்டிலும் இடம் தரக் கூடாது” - குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தாரா நாட்டாமை?!

குடும்பச் சண்டையைப் பொதுவெளியில் போட்டுக்கொண்டதால் ஊர்ப் பெயர் கெட்டுவிட்டதாகக் கூறி, பஞ்சாயத்துதாரர்கள் கூடி ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், துண்டுப்பிரசுரம் அச்சடித்து பொது இடங்களில் போட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர்
News
திருவாரூர்

திருவாரூர் அருகே குடும்பச் சண்டையை பொதுவெளியில் போட்டுக்கொண்டதால் ஊர் பெயர் கெட்டுவிட்டதாகக்கூறி, பஞ்சாயத்துதாரர்கள் கூடி ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், துண்டுப்பிரசுரம் அச்சடித்து பொது இடங்களில் போட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள கீழப்பட்டு மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (52). இவருடைய கணவர் சரவணன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள், ஒரு மகனுடன் ராணி வசித்துவருகிறார். இந்த நிலையில், ராணியின் தம்பி ராஜேந்திரனுக்கும், அவர் மனைவி ரேவதிக்குமிடையே அண்மையில் சண்டை நடந்திருக்கிறது.

அதைக் காரணம்காட்டி, ஊர் நாட்டாமையான சரவணன் பஞ்சாயத்தைக் கூட்டி, ராணி குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் அது தொடர்பாக துண்டுப்பிரசுரம் அச்சடித்து ஊர் பொது இடங்களில் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராணி குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

துண்டுப்பிரசுரம்
துண்டுப்பிரசுரம்

இது குறித்து ராணியிடம் பேசினோம். ``கடந்த வாரம் எங்க ஊருல பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடந்துச்சு. அதுக்கு தஞ்சாவூர் கத்தரிநத்தம் கிராமத்துல வசிக்கும் என்னோட தம்பி ராஜேந்திரன், பிரிந்து வாழும் அவரோட மனைவி ரேவதி வந்திருந்தாங்க. ரேவதி என்னோட தம்பியைப் பார்த்து கட்டவிரலை உயர்த்தி, `நீ இருக்குற இடத்துக்கு நான் வந்துட்டேன் பார்த்தியா' எனக் கிண்டல் செஞ்சுருக்கா.

தன்னால் நிகழ்ச்சி கெட்டுவிடக் கூடாது என நினைச்ச என் தம்பி, தன் மனைவி வெளியே வந்ததும் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி ரோட்டில் நின்னான். பிறகு என் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் சண்டை நடந்தது. அருகிலிருந்த நாங்கள் சமாதானம் செய்து விளக்கிவிட்டோம். அன்னைக்கு ராத்திரி, ஊர் நாட்டமை பஞ்சாயத்தைக் கூட்டி என் தம்பியை அழைச்சாரு. அவன், `எனக்கும், என்னோட மனைவிக்கும்தான் பிரச்னை. போலீஸில் புகார் கொடுக்கச் சொல்லுங்க, எதுவாக இருந்தாலும் சட்டப்படி பார்த்துக்கறேன்'னு சொல்லிட்டு ஊருக்குப் போயிட்டான்.

திருவாரூர்: ``சுடுகாட்டிலும் இடம் தரக் கூடாது” - குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தாரா நாட்டாமை?!

அதுக்குப் பிறகு எங்கள பஞ்சாயத்துக்கு அழைச்சாங்க, ஆனா, நாங்கப் போகல. இதனால ஆத்திரமடைந்த நாட்டாமை, பஞ்சாயத்துதார்கள், எங்க குடும்பத்த ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க தீர்மானம் போட்டாங்க. கரன்ட்டை கட் செய்யணும், குடிதண்ணீர் தரக் கூடாது, கோயிலுக்கு வரக் கூடாது, எங்களுடன் யாரும் பேசக் கூடாது, சுடுகாட்டிலும் இடம் கொடுக்கக் கூடாது'னு பல கட்டுப்பாடுகள விதிச்சாங்க.

எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள துண்டுப்பிரசுரமாக அச்சடித்து ஊர் பொதுஇடங்களில் போட்டாங்க. என் மகன் ராஜாராமனை வழக்கமாக கட்டட வேலைக்கு ஒருவர் அழைச்சிட்டு போவாரு. நாட்டாமை ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சுருக்குறதால வேலைக்கு அழைச்சிட்டுப் போக முடியாதுனு அவரு சொல்லிட்டாரு. மகன் போய் பஞ்சாயத்தார்களிடம் `ஊரைவிட்டு எதுக்கு ஒதுக்கி வச்சீங்க. நாங்க என்ன தப்பு செஞ்சோம், மறுபடியும் கூட்டத்தைக் கூட்டி காரணம் சொல்லுங்க' எனக் கேட்டதற்கு நாட்டாமை தரப்பினர் முறையான பதில் சொல்லல.

திருவாரூர்: ``சுடுகாட்டிலும் இடம் தரக் கூடாது” - குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தாரா நாட்டாமை?!

இதனால மனசு ஒடஞ்சு கிடக்குறோம். இந்த விஷயம் எப்படியோ வெளியே தெரிஞ்சு, போலீஸ்காரங்க இருதரப்பையும் அழைச்சு விசாரிச்சாங்க. ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், துண்டுப்பிரசுரம் அச்சடித்துக் கொடுத்ததால் எங்களால வெளியே தலைகாட்ட முடியல. 15 அடி தூரத்தில் இருக்கும் கோயிலுக்குக்கூட போக முடியவில்லை. விஷயம் பெரிதானதால பஞ்சாயத்தார்கள் இப்ப எங்களிடம் சமாதானம் பேசுறாங்க. இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு வேணும்" என்றனர் கலக்கமாக.

இது குறித்து ஊர் பஞ்சாயத்தார்கள் தரப்பில் விசாரித்தபோது, ``நாங்கள் கூட்டம் நடத்தவில்லை, ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கவும் இல்லை. அவர்களை அசிங்கப்படுத்துவதற்காக யாரோ துண்டுப்பிரசுரம் அச்சடித்து பொதுவெளியில் போட்டிருக்கின்றனர். எங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.