Published:Updated:

டெல்லி: பர்த்டே பார்ட்டியில் மோதல்... கொடூர தாக்குதல்! - ட்விட்டரில் விவாதமான ரிங்கு ஷர்மா கொலை

ரிங்கு ஷர்மா
ரிங்கு ஷர்மா

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் #JusticeForRinkuSharma என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ``மன்னித்துவிடு. நாங்கள் தோற்றுவிட்டோம்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

டெல்லியின் புறநகர்ப் பகுதியான மங்கோல்பூரியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரான ரிங்கு ஷர்மா கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரிங்கு ஷர்மா
ரிங்கு ஷர்மா

கடந்த புதன்கிழமை மதியம் மங்கோல்பூரியில் நடந்த பர்த்டே பார்ட்டியில் ரிங்கு ஷர்மா கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ரிங்கு ஷர்மாவுக்கும் அங்கிருந்த நால்வருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ரிங்குவின் வீட்டுக்கு ஆயுதத்தோடு வந்த அந்த நால்வரும், அவரை சரமாரியாகத் தக்கியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ரிங்கு ஷர்மாவின் தம்பி கூறுகையில், ``கத்தி, கட்டைகளோடு நான்கு பேர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினர். நான் கதவைத் திறந்தவுடன் `ரிங்கு எங்கே?' என்றனர். தொடர்ந்து என்னைத் தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்குள் சென்று, ரிங்குவை வெளியில் இழுத்து வந்து பலமாகத் தாக்கினர்'' என்று கூறியிருக்கிறார்.

ரிங்கு ஷர்மா
ரிங்கு ஷர்மா
`இந்து மக்களுக்கு பா.ஜ.க நல்லது செய்திருக்கிறதா?' - அமித் ஷாவுக்கு சவால்விடும் ஆர்.எஸ்.பாரதி

இது குறித்து டெல்லி போலீஸார், ``பர்த்டே பார்ட்டியில் இந்த நால்வருக்கும் ரிங்குவுக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ரோகினி பகுதியில் இவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நடத்திவந்த உணவகம், லாக்டெளன் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தால் மூடப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசியபோதுதான் சண்டை வந்திருக்கிறது. பின்னர் இந்த நால்வரும் ஆயுதங்களுடன் சென்று ரிங்குவை, அவரது வீட்டுக்கு வெளியில்வைத்துத் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஒருவர் ரிங்குவின் முதுகில் பெரிய கத்தியால் குத்தியிருக்கிறார்.

இதையடுத்து அருகிலிருக்கும் மருத்துவமனையில் ரிங்கு அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜாஹித் (Zahid), முகமது இஸ்லாம், டேனிஷ் (Danish), மேத்தாப் (Mehtab) ஆகிய நால்வரையும் வியாழக்கிழமை அன்று கைதுசெய்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் தொழில் பிரச்னை காரணமாகக் கொலை நடந்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது'' என்று கூறியிருக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ரிங்கு ஷர்மா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ரிங்கு ஷர்மாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலரும், ``ரிங்குவின் கொலைக்குக் காரணம் தொழில் பிரச்னையில்லை'' என்று சொல்லி அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கின்றனர்.

மேலும், ``ரிங்கு, அயோத்தியாவில் கட்டப்படவிருக்கும் ராம் மந்திருக்கு நிதி திரட்டும் பேரணியில் கலந்துகொண்டார். அப்போது `ஜெய் ஶ்ரீராம்' கோஷங்களை எழுப்பினார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர்தான் அவரைக் கொன்றுவிட்டனர்'' என்றும் கூறியிருக்கின்றனர்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின், ரிங்கு ஷர்மா கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்
1528-ல் பாபர் மசூதி... 2020-ல் ராமர் கோயில்... 492 ஆண்டு வரலாற்றுச் சுருக்கம்! #AyodhyaRamMandir

இதையடுத்து சமூக வலைதளங்களில், வி.ஹெச்.பி அமைப்பைச் சேர்ந்தவர்களும், பா.ஜ.க-வினரும், ``இந்துக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பேயில்லை. ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பியதற்காக இஸ்லாமியர்கள் ரிங்கு ஷர்மாவை கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனே அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்று பதிவிட்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து #JusticeForRinkuSharma, #HinduLivesMatter ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.
டிரெண்ட்
டிரெண்ட்
Varun N

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் #JusticeForRinkuSharma என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, ``மன்னித்துவிடு. நாங்கள் தோற்றுவிட்டோம்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு