Published:Updated:

ஆயுள் தண்டனை; 22 ஆண்டுகள் சிறை! - சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மகிளா நீதிமன்றம் அதிரடி

நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இருவேறு பகுதிகளை சேர்ந்த சிறுமிகள், பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்குகளில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஆயுள் தண்டனை; 22 ஆண்டுகள் சிறை! - சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மகிளா நீதிமன்றம் அதிரடி

இருவேறு பகுதிகளை சேர்ந்த சிறுமிகள், பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்குகளில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Published:Updated:
நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள 'பட்டு' என முடியும் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் கடந்த 2011-ம் ஆண்டு 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த குழந்தையின் உறவினரான இளையராஜா என்பவர், அக்குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இளையராஜாவை கைது செய்தது காவல்துறை. இந்த வழக்கு விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார் வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி.

மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்!
மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்!
மாதிரி படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குற்றம் சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதமும், இந்த அபராதத்தை கட்டுவதற்கு தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 3 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இளையராஜா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2019-ம் ஆண்டு 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பூபதி என்ற இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அறிந்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர், அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்திருந்தது காவல்துறை.

பூபதி
பூபதி

இந்நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சியங்களின் விசாரணையும் முடிவுற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமாரவேல். மேலும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 9 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்ததற்காக கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

இதையடுத்து பூபதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு உரிய விசாரணைக்கு பின்னர் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism