Published:Updated:

இந்து மாணவியுடன் ஃபிரெண்ட்ஷிப்; சரமாரியாகத் தாக்கப்பட்ட முஸ்லிம் மாணவன்! - என்ன நடந்தது?

மாணவர்மீது தாக்குதல்

இந்து மாணவியுடன் நட்பாகப் பழகிவந்த முஸ்லிம் இளைஞர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து மாணவியுடன் ஃபிரெண்ட்ஷிப்; சரமாரியாகத் தாக்கப்பட்ட முஸ்லிம் மாணவன்! - என்ன நடந்தது?

இந்து மாணவியுடன் நட்பாகப் பழகிவந்த முஸ்லிம் இளைஞர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மாணவர்மீது தாக்குதல்

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள ஓர் அரசுக் கல்லூரியில் முகமது கைஃப் (19 வயது) என்பவர் முதலாம் ஆண்டு பி.காம் படித்துவருகிறார். முகமது அதே கல்லூரியைச் சேர்ந்த இந்து மாணவி ஒருவருடன் நட்பாகப் பழகிவந்திருக்கிறார். கல்லூரியில் சிலர் இவர்கள் நட்பாகப் பழகிவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்திருக்கின்றனர். மேலும், முகமது கைஃப்பிடம், ``நீ அந்தப் பெண்ணிடம் இனி பேசக் கூடாது, பழகக் கூடாது" என மிரட்டல் விடுத்து, அந்த மாணவியையும் எச்சரித்திருக்கின்றனர்.

ஆனால் கைஃப் அவர்களின் பேச்சைக் கேட்காமல் இருந்துவந்ததாகத் தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட மாணவர்கள், முகமதை கல்லூரி மைதானத்துக்கு இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
Pixabay

இந்த விவகாரம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக போலீஸில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சம்பவம் தொடர்பாகப் பேசிய போலீஸார், ``காயமடைந்த முகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரைத் தாக்கிய மாணவர்கள்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.