Published:Updated:

`எவ்வளவோ சொன்னோம், அவர் கேட்கவில்லை!' -கரூரில் தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகன்

எரிந்த நிலையில் கார்
எரிந்த நிலையில் கார்

என் தந்தைக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருந்தது. இதை அறிந்த எனது தாய், எங்கப்பாவைக் கண்டித்தார். ஆனால், அவர் கேட்கவில்லை.

கரூர் மாவட்டத்தில் வேறொரு பெண்ணுடன் தவறான நட்பில் இருந்த கணவரை, மகனோடு சேர்ந்து மனைவியே எரித்துக் கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ்.பி பாண்டியராஜன் விசாரணை
எஸ்.பி பாண்டியராஜன் விசாரணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே இருக்கிறது குப்பம் - வேலம்பாளையம் கிராமம். இந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் நேற்று அதிகாலை ஆல்டோ கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் நின்றுகொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள், க.பரமத்தி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த ஆய்வாளர் ரமாதேவி தலைமையிலான போலீஸார், காரை ஆய்வுசெய்தனர்.

`தினமும் இதையே சொல்லி திட்டினார்!' - நண்பரின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

அந்த காரின் பின்பக்கத்தில் ஆண் பிணம் ஒன்று எரிந்து கருகிப்போன நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், `எரிந்த நிலையில் இருந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தனர். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனும் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், அந்த கார் நொய்யல் குறுக்குச் சாலையைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

எஸ்.பி பாண்டியராஜன்
எஸ்.பி பாண்டியராஜன்

காரில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது, ரங்கசாமிதான் என்பதும் தெரியவந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் பழைய லாரிகளை வாங்கி புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில்களைச் செய்து வந்திருக்கிறார் ரங்கசாமி. நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரது மனைவி கவிதா மற்றும் மகன் அஸ்வின்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேச, சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொண்டனர். முடிவில், தானும் தனது மகனும் சேர்ந்து, கணவரைக் கொலை செய்தோம் என்பதை ஒப்புக் கொண்டார் கவிதா. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

போலீஸ் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்த ரங்கசாமியின் மகன் அஸ்வின்குமார்,

`` கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் இரண்டாமாண்டு படித்து வருகிறேன். என் தந்தைக்கும் பக்கத்தில் உள்ள வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருந்தது. இதை அறிந்த எனது தாய், எங்கப்பாவைக் கண்டித்தார். ஆனால், அவர் கேட்கவில்லை. கடந்த 4ம் தேதி எங்கப்பா, அந்தப் பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததை, நான் நேரிடையாகப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், கடுமையான கோபம் வந்தது. இதை எங்கள் அம்மாவிடம் கூறியபோது, அவரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

கடந்த 5ம் தேதி மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்தார் அப்பா. அப்போது அவரிடம், வேறு பெண்ணுடனான தவறான தொடர்பு குறித்து அம்மா கேட்டார். இதனால் கோபமான அப்பா, 'எனக்கு விருப்பமான வாழ்க்கையைத்தான் வாழ்வேன். விருப்பம் இருந்தா இரு. இல்லைன்னா, உன் மகனை அழைச்சுக்கிட்டு வெளியே போய்விடு' என சத்தம் போட்டார்.

எரிந்த நிலையில் கார்
எரிந்த நிலையில் கார்

அத்துடன், அம்மாவை அடித்து உதைத்தார். இதனால், கோபமடைந்த நான் என் அப்பாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். இதன்பிறகு அப்பாவின் உடலை காரில் போட்டுக் கொண்டு அம்மாவுடன் குப்பத்துக்கும் வேலம்பாளைத்துக்கும் இடைப்பட்ட சாலையில் சென்றோம். அப்போது, அங்குள்ள பள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது. எவ்வளவு முயற்சி செய்தும், காரை நகர்த்த முடியவில்லை.

இதனால், யார் கண்ணிலாவது சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில், காரில் இருந்த எனது தந்தை உடல்மீது டீசலை ஊற்றி தீ வைத்து எரித்தோம். பிறகு, ஒன்றும் தெரியாததுபோல் நானும் அம்மாவும் நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஆனால், போலீஸாரின் விசாரணை வேகத்தை தாக்குப்பிடிக்கமுடியாமல், குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் வந்துவிட்டது. தவறு செய்த அப்பாவைக் கொன்றதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்" எனக் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வேறு ஒரு பெண்ணுடன் கணவர் தவறான தொடர்பில் இருந்த விவகாரத்தில், மகன் உதவியோடு மனைவியே காரில் வைத்து எரித்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு