Published:Updated:

ம.பி, ராஜஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 12 குழந்தைகள்; கேரள மத போதகர் உட்பட மூவர் கைது! - பின்னணி என்ன?

கைது

ம.பி, ராஜஸ்தானிலிருந்து கேரளாவுக்கு ரயிலில் 12 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிரியார் உட்பட மூவரை போலீஸார் கைதுசெய்தனர்.

ம.பி, ராஜஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 12 குழந்தைகள்; கேரள மத போதகர் உட்பட மூவர் கைது! - பின்னணி என்ன?

ம.பி, ராஜஸ்தானிலிருந்து கேரளாவுக்கு ரயிலில் 12 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிரியார் உட்பட மூவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

கடந்த செவ்வாய்க்கிழமை (26-7-2022) இரவு ஓகா எக்ஸ்பிரஸில் ராஜஸ்தானிலிருந்து கேரளாவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளில் சிலர், ``12 குழந்தைகள் சந்தேகத்துக்குரிய முறையில் ரயிலில் பயணிக்கின்றனர்" என ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, குழந்தைகளுடன் வந்த ஆறு பெரியவர்களிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த ஆறு பேரில் சிலர் பெற்றோர்கள் என்றும், இருவர் முகவர்கள் என்றும் ரயில்வே காவல்துறை கண்டறிந்தனர்.

மேலும் விசாரணையில், குழந்தைகள் இலவசக் கல்விக்காகக் கருணா அறக்கட்டளைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிவித்தனர். அவர்களின் பதிலில் தெளிவில்லாததால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலிருந்து கேரளாவுக்கு 12 பெண் குழந்தைகள் கடத்தப்படுவதாக சந்தேகித்த போலீஸார், எர்ணாகுளத்தில் செயல்பட்டுவரும் `கருணா பவன்' அறக்கட்டளையின் இயக்குநரும், பாதிரியாருமான ஜேக்கப் வர்கீஸ் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த லோகேஷ் குமார் (29), ஷ்யாம் லால் (25) ஆகிய முகவர்கள்மீது கடத்தல் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர்.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள், ``ராஜஸ்தானைச் சேர்ந்த 11 குழந்தைள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை என மொத்தம் 12 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவின் (CWC) வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம்சாட்டப்படும் கருணா பவன் அறக்கட்டளைக்குச் சரியான உரிமம் இல்லை என்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!