Published:Updated:

`கொலை செய்ய பயன்படுத்திய பைக்; கட்டில்!'- ஆதாரத்துக்காக கேரளாவிலிருந்து நீலகிரி வந்த போலீஸ்

தடயவியல் நிபுணர்கள் சோதனை
தடயவியல் நிபுணர்கள் சோதனை

ஏதும் தெரியாததுபோல் வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலுார் வந்து புலியாடிப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறினார்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள முக்கம் மானாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிர்ஜு. 53 வயதான இவர் 2014-ம் ஆண்டு 70 வயதான தன் தாய் ஜெயவல்லியை கூலிப்படையைச் சேர்ந்த இவரின் நண்பர் இஸ்மாயில் என்பவருடன் சேர்ந்து, கழுத்தை நெறித்து கொலை செய்து, சீலிங் பேனில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என‌ நாடகமாடி நம்ப வைத்தார்.

தடயவியல் நிபுணர்கள் சோதனை
தடயவியல் நிபுணர்கள் சோதனை

தாயைக் கொலைசெய்ய இஸ்மாயிலுக்கு ரூ.10 லட்சம் தருவதாகத்தான் பேச்சு. ஆனால், குறிப்பிட்ட தொகையை வழங்காத நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 2017 ஜூலை மாதம் 29-ம் தேதி முக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு, இஸ்மாயிலை வரவழைத்து, உணவையும் மதுவையும் வழங்கி கொலை செய்து சடலத்தைத் துண்டுகளாக்கி, பிளாஸ்டிக்கில் கட்டி, தனது பைக்கில் எடுத்துச் சென்று, சாலையோரம், புதர், ஆறு எனக் கோழிக்கோட்டின் பல இடங்களில் வீசியெறிந்தார்.

பின்னர், எதும் தெரியாததுபோல் வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலுார் வந்து புலியாடிப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறினார்.

இஸ்மாயிலின் உடல்பாகங்களைக் கண்டெடுத்த, கேரள க்ரைம் பிராஞ்ச் போலீஸார், தொடர் விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடர்புடைய பிர்ஜுவை கடந்த 16-ம் தேதி பிதர்காடு செல்லும் வழியில் கைது செய்தனர். பின்னர், தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பீர்ஜுவை முக்கம் பகுதியில் கடந்த, 6 நாள்களாகத் தொடர் விசாரணை செய்ததுடன், கொலை நடந்த வீடு, உடல் பாகங்களை வீசியெறிந்த இடங்களில் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள் சோதனை
தடயவியல் நிபுணர்கள் சோதனை

இந்த நிலையில், 7வது நாளாக நேற்று, பந்தலுார் புலியாடியில் உள்ள இவரது வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்த, அவரின், கொலை செய்ய பயன்படுத்திய கட்டில் மற்றும் பைக்கில் உள்ள ரத்தக்கரைகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கேரள போலீஸார், "தன் தாய் ஜெயவல்லி மற்றும் நண்பர் இஸ்மாயிலைக் கொலை செய்ய இந்தக் கட்டிலைத்தான் பயன்படுத்தியுள்ளார். இஸ்மாயிலை பல துண்டுகளாக வெட்டி பைக்கில் பார்சலாகக் கட்டிக்கொண்டு பல இடங்களில் வீசியுள்ளார். எனவே, கட்டில் மற்றும் பைக்கில் ஏதேனும் தடயங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய அழைத்து வந்தோம்" என்றனர்.

தடயவியல் நிபுணர்கள் சோதனை
தடயவியல் நிபுணர்கள் சோதனை

இதில் கேரள குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பினோய் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மனோஜ், ஜிதேஷ், பிரகாஷ், வினோத், கைரேகை நிபுணர் இஸ்ஹாக் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

பின் செல்ல