Published:Updated:

உயிரிழந்த பட்டியல் சமூகப் பெண்; அடக்கம் செய்ய இடமின்றி தவிப்பு - ஊரின் ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்!

உயிரிழந்த அமுதா

நிரந்தர சுடுகாடு இல்லாததால் இன்னல்பட்டுவருகின்றனர் கொட்டியாம்பூண்டி பட்டியல் சமூக மக்கள்.

உயிரிழந்த பட்டியல் சமூகப் பெண்; அடக்கம் செய்ய இடமின்றி தவிப்பு - ஊரின் ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்!

நிரந்தர சுடுகாடு இல்லாததால் இன்னல்பட்டுவருகின்றனர் கொட்டியாம்பூண்டி பட்டியல் சமூக மக்கள்.

Published:Updated:
உயிரிழந்த அமுதா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் எட்டு பட்டியல் சமூகக் குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்துவருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்... ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துவந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்துக்கு தனியாகச் சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குப் பல முறை அந்த மக்கள் மனு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், நிலையான சுடுகாடு அமைத்துத் தராமல்... சூழ்நிலைக்கு ஏற்ப தற்காலிக இடங்களை மட்டும் அதிகாரிகள் அமைத்துக் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு அந்த கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பட்டியல் சமூகப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலையான சுடுகாடு இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டு வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர் அந்தப் பெண்மணியின் உறவினர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் அடிப்படையில், விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் ஓர் இடத்தைத் தேர்வுசெய்து காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறந்த பெண்மணியின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, "கோயில் அருகிலேயே இருக்கிறது. அதனால் இங்கு உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம்" எனக் கூறி மற்றொரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடமின்றி இன்னலுக்கு உள்ளான பட்டியல் சமூக மக்கள், தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை வைத்து இறந்தவரின் உடலை எடுக்காமல் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எரிக்கப்பட்ட பட்டியல் சமூகப் பெண்மணி அமுதாவின் உடல்.
எரிக்கப்பட்ட பட்டியல் சமூகப் பெண்மணி அமுதாவின் உடல்.

அதைத் தொடர்ந்து, கொட்டியாம்பூண்டி ஊரில் உள்ள ஓர் ஓடையின் அருகே தற்காலிக இடம் தேர்வுசெய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு உயிரிழந்த அமுதாவின் உடல் வைக்கப்பட்டு இன்று மாலை எரியூட்டப்பட்டது. மேலும், வரும் 26-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெறவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பட்டியல் சமூக மக்களுக்கு சுடுகாடு அமைப்பதற்கு மாற்று சமூக நபர் ஒருவர் தனது நிலத்தை வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism