Published:Updated:

செஞ்சி: பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.10,000 லஞ்சம்... நில அளவையாளர் கைது!

லஞ்சம்

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய செஞ்சி நில அளவையாளர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செஞ்சி: பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.10,000 லஞ்சம்... நில அளவையாளர் கைது!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய செஞ்சி நில அளவையாளர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
லஞ்சம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சக்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர், தனக்குச் சொந்தமான இரு காலி மனைப் பட்டாக்களை பெயர் மாற்றம் செய்யக் கோரி வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், பட்டா பெயர் மாற்றம் செய்வது குறித்து அண்மையில் செஞ்சி நில அளவையாளர் அன்புமணியை அணுகியிருக்கிறார் அவர். அப்போது, நில அளவை செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டிருக்கிறார் அன்புமணி.

கைதுசெய்யப்பட்ட நில அளவையாளர்
கைதுசெய்யப்பட்ட நில அளவையாளர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோசப், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடி.எஸ்.பி தேவநாதனைச் சந்தித்து புகார் தெரிவித்திருக்கிறார். புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வழிகாட்டுதல்படி, நில அளவையாளர் அன்புமணியிடம் அந்த லஞ்சப் பணத்தைக் கொடுப்பதற்காக அவரைத் தொலைபேசியில் அழைத்தார் ஜோசப். அப்போது, செஞ்சி பகுதியில் உள்ள ஓர் இடத்துக்கு ஜோசப்பை வரும்படி அழைத்த அன்புமணி, அவரிடமிருந்து லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அன்புமணியைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். பின், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அன்புமணியிடம் தொடர் விசாரணையும் மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் - விழுப்புரம்
லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் - விழுப்புரம்

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக, நில அளவையாளர் லஞ்சம் பெற்றதால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism