Published:Updated:

அமரர் ஊர்தி வழங்க மறுத்த மருத்துவமனை; தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கட்டிக்கொண்டு சென்ற மகன்கள்!

அமரர் ஊர்தி வழங்க மறுத்த மருத்துவமனை

மருத்துவமனை ஊழியர்கள் வாகனம் தராததால், தன் தாயின் உடலை மகன்கள் இருவரும் 80 கி.மீ தூரத்துக்கு பைக்கிலேயே கொண்டு சென்ற அவலச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

அமரர் ஊர்தி வழங்க மறுத்த மருத்துவமனை; தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கட்டிக்கொண்டு சென்ற மகன்கள்!

மருத்துவமனை ஊழியர்கள் வாகனம் தராததால், தன் தாயின் உடலை மகன்கள் இருவரும் 80 கி.மீ தூரத்துக்கு பைக்கிலேயே கொண்டு சென்ற அவலச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

Published:Updated:
அமரர் ஊர்தி வழங்க மறுத்த மருத்துவமனை

மத்தியப் பிரதேசத்தில், இறந்தவரின் உடலைக் கொண்டு செல்ல அரசு மாவட்ட மருத்துவமனை ஊழியர்கள் வாகனம் தராததால், தன் தாயின் உடலை மகன்கள் இருவரும் 80 கி.மீ தூரத்துக்கு பைக்கிலேயே கொண்டு சென்ற அவலச் சம்பவம் நடந்திருக்கிறது.

கடந்த வாரம் இதே மாநிலத்தில், பள்ளியொன்றில் 30 மாணவர்களுக்கு ஒரே ஊசியைக்கொண்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நாள்களில் கோடாரு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷாதோல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு
சித்தரிப்புப் படம்

பின்னர் ஜெய்மந்திரியின் உடல்நிலை மோசடைந்ததால், அருகிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவே ஜெய்மந்திரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து இறந்தவரின் மகன்கள், தங்கள் தாயின் உடலைக் கொண்டு செல்ல வாகனம் வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கைவைத்ததாகவும், அதற்கு அவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து மகன்கள் இருவரும், 100 ரூபாய்க்கு மரப்பலகை வாங்கி வந்து பைக்கில் தங்கள் தாயின் உடலைக்கட்டி, 80 கி.மீ தூரத்திலுள்ள தங்கள் கிராமத்துக்கு பைக்கிலேயே கொண்டு சென்றிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய இறந்தவரின் மகன் சுந்தர் யாதவ், ``மாவட்ட மருத்துவமனை செவிலியர்கள் கவனக்குறைவாகச் சிகிச்சையளித்தனர். என் தாயின் மரணத்துக்கு மருத்துவமனை நிர்வாகம்தான் காரணம். மருத்துவமனையிடம், உடலைக் கொண்டு செல்ல வாகனம் கேட்டோம். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர். வெளியே வாடகைக்கு வாகனம் கேட்டுப்பார்த்தோம். ஆனால் வாடகைக்கு ரூ.5,000 கேட்டதால், பணம் இல்லாத காரணத்தால் எங்களால் அதுவும் முடியவில்லை" என்றார்.