Published:Updated:

கட்டாயத் திருமணத்தை நிறுத்திய மாணவி 5 நாள்களில் தற்கொலை; பாதுகாக்கத் தவறியதா அரசு?

death ( Representational image )

``தனக்கு வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று புகார் தெரிவித்த மாணவியை புகாருக்குள்ளான பெற்றோரிடமே விட்டு வந்தது தவறு, அவரை அரசுக் காப்பகத்தில் பாதுகாப்பாகச் சேர்த்திருக்க வேண்டும்.''

கட்டாயத் திருமணத்தை நிறுத்திய மாணவி 5 நாள்களில் தற்கொலை; பாதுகாக்கத் தவறியதா அரசு?

``தனக்கு வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று புகார் தெரிவித்த மாணவியை புகாருக்குள்ளான பெற்றோரிடமே விட்டு வந்தது தவறு, அவரை அரசுக் காப்பகத்தில் பாதுகாப்பாகச் சேர்த்திருக்க வேண்டும்.''

Published:Updated:
death ( Representational image )

``என் திருமணத்தை நிறுத்துங்கள்" என்று சில நாள்களுக்கு முன் எஸ்.பி-க்கு மெசேஜ் அனுப்பிய பள்ளி மாணவி, அந்தத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட நிலையில், நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்குக் காலத்தில் அதிகமான அளவில் குழந்தைத் திருமணங்கள் நடந்து வருகின்றன. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், இது குறித்து சமூக ஆர்வலர்களுக்கு வரும் தகவலை அடுத்து, ஒரு சில திருமணங்கள் தடுக்கப்பட்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

Girl - Representational Image
Girl - Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மதுரை எஸ்.பி மொபைலுக்கு, ``ப்ளஸ் டூ படித்து வரும் எனக்குக் கட்டாயத் திருமணம் செய்ய உள்ளார்கள். தடுத்து நிறுத்துங்கள்" என்று மாணவி ஒருவர் மெசேஜ் அனுப்ப, மாணவியின் வீடு மாநகர எல்லைக்குள் வருவதால், இத்தகவல் உடனே மாநகர காவல்துறை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே களத்தில் இறங்கிய மாநகர காவல்துறையினர், சமூக நலத்துறையினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்குச் சென்று அவர் பெற்றோரிடம் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து, மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்ய மாட்டோம் என்று பெற்றோர் தரப்பில் எழுதிக் கொடுத்துள்ளனர். அதனால், பெற்றோரிடமே மாணவியை ஒப்படைத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது, மாணவியின் தற்கொலை சம்பந்தமாக அவர் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைத் திருமணம் - Representational Image
குழந்தைத் திருமணம் - Representational Image

`தனக்கு வீட்டில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று புகார் தெரிவித்த மாணவியை புகாருக்குள்ளான பெற்றோரிடமே விட்டு வந்தது தவறு, அவரை அரசுக் காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்திருக்க வேண்டும். மீண்டும் அவருக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்திருக்கலாம் அல்லது பெற்றோர் திட்டியிருக்கலாம். அதனால் மனம் உடைந்து தற்கொலை முடிவை மாணவி எடுத்திருக்கலாம். மாணவியைப் பாதுகாக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது' என்று சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இந்தச் சம்பவத்தைக் காவல்துறை விசாரித்து வரும் நிலையில் சமூக நலத்துறை, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவும் விசாரித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர் பாண்டியராஜனிடம் பேசினோம்.

``அந்தச் சிறுமியின் தற்கொலை பற்றி விசாரித்து வருகிறார்கள். பொதுவாகக் குழந்தைத் திருமணங்கள் பற்றிப் புகார் வந்தால் அதைத் தடுத்து அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பு வழங்க சமூக நலத்துறை, காவல்துறை, சைல்ட் லைன் ஆகியோருடன் குழந்தைகள் நலக்குழுவும் இணைந்து செயல்படுவோம்.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

திருமணம் நடந்து முடிந்த குழந்தைகளை அரசு இல்லங்களில் தங்க வைத்துப் பாதுகாப்போம். அவர்களின் கல்வி, எதிர்காலத்துக்கு அரசு உதவிகள் கிடைக்கச் செய்வோம். மன நல ஆலோசனைகள் வழங்குவோம். அதே நேரம், திருமணத்துக்கு முன்பே சிறுமிகள் மீடகப்பட்டால் பெற்றோருக்கு அறிவுறுத்துவோம். அக்குழந்தை படிக்க விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்வோம். பெற்றோரிடம் செல்ல மறுத்தால் அக்குழந்தையை அரசு இல்லத்தில் சேர்ப்போம் அல்லது குழந்தை பெற்றோருடன் செல்வதாகச் சொன்னால், மாதம் ஒருமுறை குழந்தையை எங்கள் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று ஆவணங்களில் எழுதி வாங்கிக்கொண்டு, அக்குழந்தையைக் கண்காணித்து வருவோம். குழந்தைக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவோம். இந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்கிறோம்.

மாவட்டத்தில் பல குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் இன்று நன்றாகப் படித்து வருகிறார்கள். மேலும், இதுபோல பாதிக்கப்பட்டு இல்லங்களில் தங்கி நன்றாகப் படித்து வரும் குழந்தைகளை எங்கள் மூலம் அறிந்துகொள்ளும் சில தனியார் அமைப்புகள், அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதனால் பெரும்பாலும் விதி மீறிய திருமணங்களாலும், திருமணம் தடுக்கப்பட்டும் மீட்கப்படும் மாணவிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட குழந்தைகள் நலக்குழுவும் விசாரணை நடத்துவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism