Published:Updated:

`போலி ஆதார்; ஆன்லைனில் ஹோட்டல் புக்கிங்!' - மதுரை போலீஸை அதிரவைத்த உஸ்பெகிஸ்தான் இளம்பெண்

நமோவா ஜெரினா
நமோவா ஜெரினா

டெல்லி முகவரியில் போலியான ஆதார் அட்டையைப் பெற்றுள்ளார். அதை வைத்து ஆன்லைனில் ஹோட்டல்களை புக் செய்து ஒவ்வோர் ஊராகத் தங்கி வந்திருக்கிறார்.

போலியான ஆதாரங்களுடன் விசாக்காலம் முடிந்த பின்னும் இந்தியாவில் சுற்றி வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டு இளம் பெண்ணை மதுரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`மதுரை பேரையூரில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள்!'- ஆச்சர்யம் தரும் வரலாற்றுத் தகவல்கள்

பெண் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் ஹேமா மாலா தலைமையில் தங்களுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. நமோவா ஜெரினா என்ற உஸ்பெகிஸ்தான் நாட்டுப்பெண்ணின் பாஸ்போர்ட், விசாவை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, நமோவா விசாக்காலம் முடிந்த பின்னும் நம் நாட்டில் தங்கியிருப்பது தெரிந்தது.

நமோவா ஜெரினா
நமோவா ஜெரினா

நமோவா ஜெரினாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். கடந்த வருடம் ஜனவரி 1 முதல் மார்ச் 10 வரையுள்ள சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். பல நகரங்களைச் சுற்றிப் பார்த்த பின்பு, தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்லாமல், டெல்லி முகவரியில் போலியான ஆதார் அட்டையைப் பெற்றுள்ளார். அதை வைத்து ஆன்லைனில் ஹோட்டல்களை புக் செய்து ஒவ்வோர் ஊராகத் தங்கி வந்திருக்கிறார். மதுரையில் கடந்த இரண்டு நாள்களாகத் தங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உண்மையிலயே சுற்றுலாப் பயணிதானா? எதற்காக இந்தியா வந்தார்? உளவாளியா? மதுரையில் வந்து தங்கக் காரணம் என்ன? இங்குள்ள புரோக்கர்களால் பாலியல் தொழில் செய்ய அழைத்து வரப்பட்டாரா? போலியான ஆதார் கார்டு ஏற்பாடு செய்த நபர் யார்? என்பதைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

`2014 - 2018... 84 நாடுகள்!' - பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ஆன செலவு விவரங்கள்

மதுரையில் பாலியல் தொழிலில் வெளிமாநிலப் பெண்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபட வைக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்துகிறார்களோ என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள். `வெளிநாட்டுக்காரர்கள் தங்கினால் அவர்களைப் பற்றிய விவரங்களைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்' என்ற விதிமுறையைச் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் மீறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு