Published:Updated:

நேரத்தோடு வந்தார்; வகுப்பறையில் தூக்கில் தொங்கினார்! - சக மாணவிகளை பதறவைத்த தோழியின் தற்கொலை

செ.சல்மான் பாரிஸ்
வி.சதிஷ்குமார்

மாணவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Student
Student

பள்ளி மாணவி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளி முன் திரண்டதால் மதுரை புதூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Protest
Protest
`நான்தான் முக்கியம் என்றான்; இப்போ கிண்டலடிக்கிறான்!' - வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை

மதுரை புதூரில் லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா இன்று காலை நேரத்தோடு வகுப்பறைக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன்பின் வந்த மாணவிகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஆசிரியைகளிடம் கூறியுள்ளனர். காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மதுரை புதூர் காந்தி நகரில் வசிக்கும் முத்துவின் மகளான அர்ச்சனா, வழக்கம்போல் இன்று காலை நேரத்தோடு பள்ளிக்கு வந்துள்ளார். வந்தவர் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். பள்ளியில் அவருக்கு பிரச்னையா அல்லது வீட்டில் பிரச்னையா என்று தெரியவில்லை.

Student
Student
`தவறு செய்திருந்தாலும் மகளை மன்னித்திருப்பேன்' - இன்ஜினீயரிங் மாணவி மனிஷாவின் தந்தை கதறல்

இந்த நிலையில், பள்ளியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி முன் கூடிவிட்டனர். பள்ளி நிர்வாகம்தான் இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள்.

இதற்கிடையே, ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் கோபமடைந்து சத்தம் போட்டனர். காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மாணவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.