Published:Updated:

`ஃபேஸ்புக் பழக்கத்தால் கர்ப்பமடைந்த ஆசிரியை; திருமணத்துக்கு மறுத்த இளைஞர்!’ - உயிரைப் பறித்த காதல்

செல்போன்
செல்போன்

ஃபேஸ்புக் பழக்கத்தால் கர்ப்பமடைந்த ஆசிரியை திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலன் அவரைக் கத்தியால் குத்தினார். இந்த மோதலின் உச்சக்கட்டத்தில், காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக் குடியிருப்பில் திருமணம் ஆகாத 31 வயது பெண் வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைசெய்கிறார். பெற்றோரை இழந்த அவர் தன் அண்ணனுடன் வசித்துவருகிறார். சமூக வலைதளங்களே கதி எனக் கிடந்த அந்த ஆசிரியை வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் மூழ்கியிருப்பார் என்கிறார்கள். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய்சங்கர் (32) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

நெருக்கமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதால், இருவரும் நேரில் பார்த்துக்கொள்ளாமலேயே செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்ததாகத் தெரிகிறது. விஜய்சங்கர் அடிக்கடி வேலூர் வந்து லாட்ஜில் அறை எடுத்து காதலியை சந்தித்தார். இந்தநிலையில், அந்தப் பெண் இரண்டு மாதம் கர்ப்பமடைந்தார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் வற்புறுத்தியதால், ஒரு மாதத்துக்கு முன்பு விஜய்சங்கர் காதலியின் வீட்டுக்கே வந்துவிட்டார். தன் வீட்டிலேயே காதலனை தங்க வைத்த அந்தப் பெண், தனியார் நிறுவனத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். 

Vikatan

திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்துவந்தனர். அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் தவறாகப் பேச ஆரம்பித்ததால் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண் கூறியிருக்கிறார். திருமணத்தில் விருப்பம் இல்லாத விஜய்சங்கர், ``சமூக வலைதளத்தில் மேலும் சில ஆண் நண்பர்களுடன் நீ தவறான தொடர்பு வைத்துள்ளாய். உன்னையெல்லாம் திருமணம் செய்துகொள்ள முடியாது’’ என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த காதலி, அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

கத்தி
கத்தி

காதலியை உயிரோடு விட்டால் நமக்குத்தான் தொந்தரவு என்று நினைத்த விஜய்சங்கர், நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த காதலியைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். கழுத்து, முகம், வயிற்றுப் பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததில் அலறித் துடித்த அந்தப் பெண், அறையிலிருந்து வெளியே ஓடிவந்து விஜய் சங்கரை வீட்டுக்குள் வைத்து வெளிப்பக்கமாகக் கதவைப் பூட்டினார். தன் அண்ணன் மூலம் அந்தப் பெண், சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காட்பாடி போலீஸார், அதிவேகமாக வந்த அந்த காரை மடக்கி விசாரித்தனர். காருக்குள் வெட்டுக்காயங்களுடன் இருந்த பெண், நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் விவரித்தார். பின்னர், சிகிச்சைக்காக அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருவலம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். விஜய்சங்கர் இருந்த அறை உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அறையின் கதவைத் தட்டினர். அவர் திறக்கவில்லை.

``மாமா, என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே!”- அழகுக்கலை நிபுணரின் உடலுக்கு உரிமை கோரிய காதலி, 2 மனைவிகள்
தூக்கில் பிணமாகத் தொங்கிய காதலன்
தூக்கில் பிணமாகத் தொங்கிய காதலன்

இதையடுத்து, கதவை உடைத்துப் பார்த்தபோது, விஜய்சங்கர் தூக்கில் பிணமாகத் தொங்கினார். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விஜய்சங்கரின் குடும்ப பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலால் அரங்கேறிய இந்தக் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு