Published:Updated:

`பழகும்போது தங்கை உறவுமுறை என்று தெரியவில்லையா?'- உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை

வேலை முடிந்து மதியம் வீடு திரும்பிய அந்தோணிசாமி உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டி மகளை அழைத்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் கிராமத்தையடுத்த வாலிஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணிசாமி, ராக்கினி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இளைய மகள் எழிலரசிக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தனது பெற்றோருடன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு திக்குவாய் பிரச்னை இருந்ததால் திருமணம் தள்ளிபோனதாக கூறிகிறார்கள். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பெற்றோர்கள் வயல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் எழிலரசி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்

வேலைமுடிந்து மதியம் வீடு திரும்பிய அந்தோணிசாமி உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டி மகள் எழிலரசியை அழைத்திருக்கிறார். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் குழப்பமடைந்த அந்தோணிசாமி, வீட்டின் பின்வாசல் வழியாக வந்து பார்த்தபோது அங்கு கட்டிலுக்குக் கீழே எழிலரசி கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார்.

அவரது கதறலைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், எழிலரசியின் சடலத்தைக் கைப்பற்றி மருத்துமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அப்போது சேத்தியாதோப்புக்கு அருகேயிருக்கும் குறிஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருடன் எழிலரசி கடைசியாகப் பேசியிருப்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண்

அதுகுறித்து விசாரித்தபோது எழிலரசியின் பெரியம்மா மகனான சுரேஷ்குமார் அன்றைய தினம் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸ் அவரைத் தேடத் தொடங்கியது. எதிர்பார்த்ததைப் போல ராமாபுரம் சாலையில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த சுரேஷ்குமாரை போலீஸ் வளைத்துப் பிடித்ததும் எழிலரசியைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

தொடர்ந்து போலீஸ் விசாரணையில், ``என் பெயர் சுரேஷ்குமார். என் அம்மா சகாயமேரியின் தங்கைதான் எழிலரசியின் அம்மா ராக்கிணி. சித்தி வீடு என்ற முறையில் அடிக்கடி நான் அங்கு சென்று வந்தேன். எழிலரசிக்கு திக்குவாய் பிரச்னை இருந்ததால் அவரது திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த நான், எழிலரசியிடம் அவரை காதலிப்பதாகச் சொன்னேன். அதற்கு, ‘உன் தங்கச்சிமுறை நான். என்னிடம் இப்படி பேசலாமா ?’ என்று கூறி மறுத்துவிட்டார். பிறகு திரும்பத் திரும்ப நான் வற்புறுத்தியதால் அவரும் ஒப்புக்கொண்டார். அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்த நாங்கள், ஒருகட்டத்தில் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் எனக்கு போன் செய்த எழிலரசி உடனே என்னை வீட்டுக்கு வரச் சொன்னார்.

சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை

அதன்படி 26-ம் தேதி காலையில் நான் எழிலரசி வீட்டுக்குச் சென்றேன். அப்போது தன்னை யாரோ பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்றும் உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் எழிலரசி கூறினார். அப்போது `அண்ணன் தங்கை முறையான நாம எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்? அதெல்லாம் சரி வராது’ என்று கூறி மறுத்தேன். அதற்கு ‘என்னிடம் பழகும்போது மட்டும் அண்ணன் தங்கை உறவு உனக்கு தெரியவில்லையா? உங்ககூட பழகிட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடணுமா?’ என்று சண்டை போட்டார் எழிலரசி. ஒருகட்டத்தில் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததால் எழிலரசியைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். என் கைகளைக்கொண்டு அவரது முகத்தில் கடுமையாகத் தாக்கியதுடன் கழுத்தையும் நெரித்தேன், வேணாம் என்னை எதுவும் பண்ணிடாதேனு சொல்லி என்னிடமிருந்து தப்பிக்க நினைத்தார் எழிலரசி. ஆனால், கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து உடலைக் கட்டிலுக்குக் கீழே தள்ளிவிட்டு வந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு