Published:Updated:

``கத்தியா... கத்தரிக்கோலா? பாத்துடுவோம்'': வங்கிக்கு வந்த கொள்ளையனை விரட்டியடித்த பெண் மேலாளர்!

Robbery ( video pic )

வங்கிக்குள் கொள்ளையடிக்க உள்ளே நுழைந்தவன், முதலில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பணத்தை எடுக்கச் சொல்கிறான். ஊழியர்கள் செய்வதறியாது மிரட்சியில் நிற்க, பெண் மேலாளர் திடீரென துணிந்து ஒரு செயலைச் செய்தார்.

மனதைப் பதற வைக்கும் குற்றங்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. கூண்டுக்குள் அகப்பட்ட பறவைகளைப் போல, குற்றங்களைப் படமெடுத்துக் கொண்டு மட்டும் இருக்கிறோம் நாம்.

Crime (Representational Image)
Crime (Representational Image)

கொலையோ, கொள்ளையோ, வழிப்பறியோ, பாலியல் தொல்லையோ அநியாயத்தைக் கண்டு ஒதுங்கி விடாமல், எதிர்த்துப் போராட வேண்டும். அப்படித்தான், தன்னுடைய வங்கி கொள்ளையடிக்கப்படுவதில் இருந்து, தடுத்துக் காப்பாற்றியுள்ளார், வங்கியின் பெண் மேலாளர் ஒருவர்.

ராஜஸ்தான், ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கிராம வங்கி ஒன்றில், முகத்தை மூடிக்கொண்டு கையில் கூரிய ஆயுதத்துடன் உள்ளே நுழைந்துள்ளான் ஒரு திருடன். வங்கிக்குள் உள்ளே நுழைந்ததும் முதலில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பணத்தை எடுக்கச் சொல்ல, ஊழியர்கள் செய்வதறியாது மிரட்சியில் நின்றனர்; அடுத்து என்ன செய்வது என்று அறியாது திகைத்தனர்.

``கத்தியா... கத்தரிக்கோலா? பாத்துடுவோம்'': வங்கிக்கு வந்த கொள்ளையனை விரட்டியடித்த பெண் மேலாளர்!

அச்சமயத்தில், தன்னுடைய கேபினில் இருந்து வெளியே வந்த வங்கியின் மேனேஜர், துணிச்சலுன் மேசை மீது இருந்த கத்தரிக்கோலை எடுத்து அத்திருடனை எச்சரிக்கை செய்தார்; திருடன் கத்தியைக் காட்டி மிரட்டினாலும் அதற்கு துளியும் அஞ்சாமல் திருடனையே திண்டாட விட்டார். பெண் மேலாளருடன் வங்கி ஊழியர்களும் இணைந்து கொண்டு திருடனை விரட்டினர்.

இதை, சற்றும் எதிர்பார்க்காத அந்தத் திருடன் வந்தவழி பார்த்துத் தப்பி ஓடினார். சிசிடிவி காட்சியில் பதிவான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கிப் பணத்தை கத்தியைக் காட்டி கொள்ளையடிக்க வந்தவனை, கத்தரிக்கோல் காட்டி விரட்டியடித்த வங்கி பெண் மேலாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.