Published:Updated:

6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... சமாளிக்க முடியாமல் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

சமாளிக்க முடியாமல் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

ஆறு ஆண்டுகளாக தந்தையால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... சமாளிக்க முடியாமல் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

ஆறு ஆண்டுகளாக தந்தையால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சமாளிக்க முடியாமல் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

மணிப்பூர் மாநிலம், இம்பாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 வயது சிறுமி, விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டிக்கிறார். அதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தில் (JNIMS) அனுமதித்திருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். அதையடுத்து, சிறுமி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில், சிறுமியின் தற்கொலை முயற்சி தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையில், சிறுநீரகம் தொடங்கி ஒவ்வொரு உறுப்பாக சிறுமிக்கு செயலிழந்து அவர் மரணித்துவிட்டார். சிறுமியின் மரணத்தை தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகின. அதில் அந்த சிறுமியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளாக பலமுறை அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார். இறுதியாக தன்னை உறைவிடப் பள்ளியில் தங்கிப் படிக்க விரும்பியதாகவும், ஆனால் அவர் தந்தை அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கொலை - கைது
கொலை - கைது

அதைத் தொடர்ந்து காவல்துறை சிறுமியின் தந்தையைக் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி, ``குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன் இரண்டு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவற்றை தனது நாள்குறிப்பில் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. டைரியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அதைத் தேடிவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.