Published:Updated:

நீலகிரி: உணவு தேடி வந்த யானை மீது தீ வைத்த கொடூரம்! - நெஞ்சைப் பதறவைத்த சம்பவம்

இந்த வீடியோவின் அடிப்படையில் யானைக்குத் தீ வைத்த ரேமண்ட், பிரசாத் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் ஒருவரைத் தேடிவருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டலப் வனப்பகுதியான பொக்காபுரம், மசினகுடி, சிங்காரா பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று முதுகில் ஏற்பட்ட காயத்துடன் உலவிவந்தது.

மசினகுடி யானை
மசினகுடி யானை

வனத்துறையினர் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, இரண்டு மணி நேரம் சிகிச்சை அளித்து பின்னர் விடுவித்தனர். தொடர்ந்து அந்த‌ யானையைக் கண்காணித்துவந்தனர்.

கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் மசினகுடி பகுதியில் அதே யானை இடது காது சிதைக்கப்பட்ட நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக உலா வந்தது. அதைப் பார்த்து பதறிய வனத்துறையினர், யானையைப் பிடித்து முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமுக்குக் கொண்டு சென்று, அங்கு சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டனர்.

தீக்காயத்துடன் யானை
தீக்காயத்துடன் யானை

இரண்டு மருத்துவக் குழுவினர் மற்றும் நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் யானையைச் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி அருகில் நெருங்கினர். முதலுதவி அளித்து, லாரியில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`எழுந்து வா எஸ்.ஐ..!' - தெப்பக்காடு முகாமை உலுக்கிய பெள்ளனின் கண்ணீர் #MasinagudiElephant

இதைத் தொடர்ந்து மூன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தபோது, யானைக்கு தீக் காயங்கள் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், இது குறித்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து, யானைக்குத் தீவைத்த நபர்களைத் தேடி வந்தனர்.

தீக் காயத்துடன் யானை
தீக் காயத்துடன் யானை

இந்தநிலையில், யானை விவகாரம் தொடர்பாக போலீஸாருக்கு வீடியோ ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவில், மசினகுடி பகுதியிலுள்ள தங்கும் விடுதி வளாகத்தில் புகுந்த அந்த யானையை மூன்று பேர் விரட்ட முயல்கிறார்கள். தீயைக் கொளுத்தி, அதன் மூலம் யானையை விரட்டுகிறார்கள். பின்னர் எரியும் பந்தத்தைவைத்து யானை மீது வீசுகின்றனர். யானையின் தலையில் விழுந்த தீப்பந்தம் கொழுந்துவிட்டு எரிய‌ யானை வலி தாங்க முடியாமல் அலறியடித்து, பிளிறியவாறே ஓடுகிறது. யானை‌மீது தீப்பற்றி எரியும் காட்சி தற்போது வெளியாகி நெஞ்சைப் பதறவைக்கிறது.

நீலகிரி: காட்டு யானைக்கு தீ வைத்து சித்ரவதை! - கொடூரர்களைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை

இந்த வீடியோவின் அடிப்படையில் யானைக்குத் தீ வைத்த ரேமண்ட் மற்றும் பிரசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் ஒருவரைத் தேடிவருகிறார்கள்.

கைதான இருவர்
கைதான இருவர்

`பழத்தில் வெடிவைத்து கேரளாவில் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்கு நேர்ந்த துயரத்தைவிட மோசமான கொடூரம் இது’ என யானைப் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு