Published:Updated:

நீலகிரி: யானைக்குத் தீ வைத்தவர்கள் மீது குண்டர்சட்டம்; ரிசார்ட்டுக்கு சீல்! - தொடரும் அதிரடி

தீ வைக்கப்பட்ட யானை
தீ வைக்கப்பட்ட யானை

யானையை உயிரோடு தீ வைத்து கொளுத்தி, உயிரிழக்கக் காரணமாக இருந்தவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு முதுமலை புலிகள் காப்பகம் பரிந்துரை செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் உணவு தேடிவந்த ஆண் காட்டு யானையின் மீது தீப்பந்தத்தை தூக்கியெறிந்து கொளுத்திய கொடூர செயல் அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது.

யானையின் மீது தீப்பந்தம்
யானையின் மீது தீப்பந்தம்

மேலும், இத்தகைய கொடூரமான செயலைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

யானைக்கு தீவைத்துக் கொளுத்தி, அதன் இறப்புக்குக் காரணமாக இருந்த மசினகுடி மாவனல்லா பகுதியில் உள்ள அந்த தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் ரேமண்ட் மற்றும் பிரசாத் ஆகிய இருவரை வனத்துறையினர் நேற்றே கைது செய்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

தலைமறைவான நிக்கிராயன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அந்த தங்கும் விடுதியை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த விடுதி உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததை கண்டறிந்து இரவோடு இரவாக அந்த விடுதிக்கு சீல் வைத்தனர்.

சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்
சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்

மேலும், இந்தப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளையும் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

நீலகிரி: உணவு தேடி வந்த யானை மீது தீ வைத்த கொடூரம்! - நெஞ்சைப் பதறவைத்த சம்பவம்

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் பேசுகையில், ``யானைக்குத் தீ வைத்தது தொடர்பாக தனியார் விடுதியைச் சேர்ந்த 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரேமண்ட் டீன், பிரசாத் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரைத் தேடி வருகிறோம்.

சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்
சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்

மூவர் மீது ஜாமினில் வெளிவர முடியாதவாறு குண்டர் சடத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகத்துகுப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு