Published:Updated:

`என் அண்ணனை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க..!'- திருந்தி வாழ்ந்த திருடனுக்குக் கிடைத்த சோகமான தகவல்

மும்பையில் திருந்தி வாழ்ந்த திருடனுக்கு, போலீஸார் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rakesh and Rajesh Chaudhary's parents
Rakesh and Rajesh Chaudhary's parents

மும்பை போரிவ்லி பகுதியில் உள்ள போய்சாரில் வசிப்பவர், ராகேஷ் சவுத்ரி. 20 வயதாகும் இவர், போரிவ்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளிடம் மொபைல், செயின் என தொடர் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவந்தவர் திருந்தி, வேறு வேலை செய்துவருகிறார். இதற்கிடையே, போரிவ்லி ரயில்வே போலீஸார், சமீபத்தில் பழைய கிரிமினல் ரெக்கார்டுகளை எடுத்துப்பார்த்து, அவர்கள் தற்போது குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா என விசாரணை நடத்திவந்துள்ளனர். அப்படி ராகேஷிடம் விசாரிக்கும்போது, ``இப்போது நான் அதுபோன்ற வேலைகளைச் செய்வதில்லை. திருந்திவிட்டேன்.

borivali railway station
borivali railway station

எனது அண்ணன் காணாமல் போனதிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வேலைக்குச் செல்கிறேன்" என்று போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார் ராகேஷ். பின்பு, போலீஸார் நடத்திய விசாரணையில், ராகேஷ் கூறியதில் உண்மை இருப்பதால் திருந்தி வாழும் அவருக்கு உதவ போலீஸார் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, காணாமல் போன ராகேஷின் அண்ணன் ராஜேஷைக் கண்டுபிடித்துக் கொடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நகைக் கடையில் வேலைபார்த்துவந்த ராஜேஷ், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காணாமல் போயுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் தகவல்களைத் திரட்டிய ரயில்வே போலீஸார், ஆறு மணிநேரத்தில் இதுதொடர்பாக விசாரிக்க டீம் ஒன்றை அமைத்துள்ளனர்.

328 மூட்டை வெங்காயம்... மதிப்பு ரூ.8 லட்சம்..!- அதிகாலையில் ஓனருக்கு அதிர்ச்சிகொடுத்த திருடன்

``திருட்டுத் தொழிலிலிருந்து திருந்திய ராகேஷ், இனியாவது நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்ற எண்ணத்திலேயே அவருக்கு ஏதாவது உதவ வேண்டும் என முடிவெடுத்தோம். அதன்படி, காணாமல்போன அவரின் அண்ணனைக் கண்டுபிடிக்க முடிவுசெய்தோம். ஒரு டீம் அமைத்து, அவரைத் தேடினோம். அவர் காணாமல்போன வழக்கை விசாரித்துவந்த சமதா நகர் போலீஸ் ஸ்டேஷனில் அவர்குறித்த விவரங்களைச் சேகரித்தோம்" என்று கூறும் ரயில்வே போலீஸாருக்கு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கிடைத்தவை சோக முடிவுகள்.

rajesh
rajesh

கிடைத்த தகவல்களை வைத்து தேடுவதற்கு முன், ரயில் விபத்தில் சிக்கி உரிமை கோரப்படாமல் இருக்கும் உடல்களின் விவரங்களைத் தற்செயலாக சோதித்துள்ளனர். சில மணி நேரங்களில் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட உடல்களில், ராஜேஷின் பெற்றோர்கள் சொல்லிய அடையாளத்துடன் ஒரு சடலம் கிடைத்துள்ளது. `ராஜேஷ் கையில் திரிசூல பச்சை குத்தியிருப்பார்' என அவரின் பெற்றோர் சொன்ன அடையாளம்தான் இந்த வழக்கில் கைகொடுத்தது. நாங்கள் தேடியபோது, இந்த அடையாளங்களுடன் ஒரு உடல் இருக்க, அந்தப் புகைப்படத்தைப் பெற்றோரிடம் காண்பித்தோம். அவர்கள், தங்கள் மகன் என உறுதிப்படுத்தினர். கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி, ஒரு விபத்தில் ராஜேஷ் இறந்துள்ளார்.

Vikatan

ஆனால், அவரின் சடலத்தை யாரும் வாங்க வரவில்லை என்பதால், அடையாளம் தெரியாத சடலங்களுடன் சேர்த்துவைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக முடிவுக்கு வராத இந்த வழக்கு, தற்போது ஆறு மணி நேர விசாரணையில் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அந்தக் குடும்பம் தவறான நம்பிக்கையில் வாழாது. திருந்தி வாழும் ராகேஷும் இனி அதிக பொறுப்புடன் குடும்பத்துக்காக நடந்துகொள்வார்" எனப் பேசியுள்ள ரயில்வே போலீஸார், தங்களால் முடிந்த உதவியை ராகேஷின் குடும்பத்துக்குச் செய்துள்ளனர்.

Rakesh and Rajesh Chaudhary's parents
Rakesh and Rajesh Chaudhary's parents

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள ராஜேஷின் பெற்றோர், ``அவன் காணாமல்போன போதே போலீஸில் புகார் கொடுத்துவிட்டோம். இரண்டு மாதம் கழித்து ராஜேஷின் போனை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார்கள். சில நாள்கள் கழித்து, ராஜேஷின் மொபைல் போனை தண்டவாளத்திலிருந்து ஒருவர் எடுத்ததாகக் கூறினார். பின்னர் எந்தத் தகவலும் இல்லை. ஒருவருடமாக நாங்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்காத நாளில்லை. ஆனால், தேடிக்கொண்டிருக்கிறோம் எனச் சொன்னார்களே தவிர எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்போது, ஒருவருடம் கழித்து என் மகனின் உடலை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இப்போதாவது அவனுக்கு என்ன நடந்தது எனத் தெரியவந்தது. அதற்குக் காரணம் ரயில்வே போலீஸ்தான். அவர்களை மறக்க மாட்டோம்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்கள்.

news and photo credit - mid-day

மைக்கில் வந்த தகவல், சிக்னல் கொடுத்த மாணவர்! - நகைக் கொள்ளையர்களை வளைத்த மதுரை போலீஸ்