Published:Updated:

தொடர் கேலி, கிண்டல்... அதிகரித்த மனஅழுத்தம்? - சக பள்ளி மாணவன் வெட்டிப் படுகொலை... நடந்தது என்ன?

படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன்

சக பள்ளி மாணவனால், பார்ட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 11-ம் வகுப்பு மாணவன், அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர் கேலி, கிண்டல்... அதிகரித்த மனஅழுத்தம்? - சக பள்ளி மாணவன் வெட்டிப் படுகொலை... நடந்தது என்ன?

சக பள்ளி மாணவனால், பார்ட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 11-ம் வகுப்பு மாணவன், அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.கீரனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சக மாணவரால் 'பார்ட்டி' என்ற பெயரில் 14-ம் தேதி இரவு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அன்று இரவு முழுவதும் வீடு திரும்பாமல் இருந்த விமல், டி.கீரனூர் புறவழிச்சாலை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மறுதினம் (15.05.2022) காலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருக்கோவிலூர் போலீஸார், உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இந்தச் சம்பவம் குறித்து 302-வது பிரிவின்கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர், பார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் மாணவர் படுகொலை செய்யப்பட்டாரா, காதல் விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா உள்ளிட்ட பல்வேறு சந்தேகக் கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், முதற்கட்ட விசாரணை முடிவுகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து திருக்கோவிலூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் பேசினோம். "பள்ளி மாணவன் விமலை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் சக மாணவன் சுரேஷ்குமாரிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விசாரணை மேற்கொண்டபோது, விமலைக் கொலை செய்தது அவனே என்பது முதற்கட்டமாகத் தெரியவந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், "இருவரும் ஒரே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்துள்ளனர். 8-ம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே சுரேஷ்குமாரை சக மாணவர்கள் பாலினம்வைத்து ஏளனமாக கேலி செய்வார்களாம். மற்ற மாணவர்களைக் காட்டிலும், விமல் அதிகமாக அந்தச் சிறுவனை கேலி செய்வாராம். இந்த நிலை நீடித்ததால், சுரேஷ்குமார் பள்ளிக்குச் செல்வதை அவ்வப்போது தவிர்த்து வந்துள்ளார்.

திருக்கோவிலூர் காவல் நிலையம், படுகொலை செய்யப்பட்ட பள்ளிச் சிறுவன்
திருக்கோவிலூர் காவல் நிலையம், படுகொலை செய்யப்பட்ட பள்ளிச் சிறுவன்

அதேபோல், சுரேஷ்குமாரின் சகோதரி உறவினருடன் கல்லூரிக்குச் செல்வதைக் குறிப்பிட்டு சுரேஷ்குமாரை அதிகமாக கேலி செய்தாராம் விமல். பொதுவாகவே யாரையும் எதிர்த்து கேட்காமல்... இவற்றையெல்லாம் அனுசரித்துவந்த சுரேஷ்குமார் ஒருகட்டத்தில் அதிகமான கோபம் மற்றும் எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளார். ஒருநாள், 'இதெல்லாம் சரியில்லை. இனி இப்படிப் பேசாதே' என்று கூறி விமலைத் திட்டினாராம். அப்போது விமல், சுரேஷ்குமாரின் தாயையும் குறிப்பிட்டுத் திட்டி மீண்டும் கேலி செய்தாராம். இந்நிலையில்தான் 14-ம் தேதியன்று, 'நான் உனக்கு பார்ட்டி வைக்கிறேன்' என்று விமலிடம் தொலைபேசியில் கூறி அழைத்திருக்கிறான் சுரேஷ்குமார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சக மாணவன்தானே என்ற நம்பிக்கையில், "அம்மா... ஃபிரண்டோட அண்ணனுக்குக் கல்யாணம். அதனால என்னோட ஃபிரண்டு பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கான். நான் அங்கு செல்கிறேன்" என்று வீட்டில் கூறிவிட்டு சுரேஷ்குமாருடன் சென்றிருக்கிறான் விமல். ஆனால், அது போன்ற ஒரு திருமணமே அங்கு நடைபெறவில்லை. அங்கிருந்து சென்ற இருவரும் ஒரு கடையில் 'ஃபிரைடு ரைஸ்' வாங்கிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேரும் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். அப்போது, மறைத்துவைத்திருந்த அரிவாளைக்கொண்டு விமலின் கழுத்து மற்றும் கைப் பகுதிகளில் பயங்கரமாக வெட்டிய சுரேஷ்குமார்... மற்றொரு சிறிய கத்தியைக்கொண்டு வயிற்றுப் பகுதியிலும் குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறான்.

சம்பவ இடத்தில் போலீஸ்
சம்பவ இடத்தில் போலீஸ்

இந்தப் பின்னணி, சுரேஷ்குமாரின் வாக்குமூலத்தில் தெரியவந்ததையடுத்து அவரை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளோம். மேலும், இதுதான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் பின்புலங்கள் இருக்கின்றனவா உள்ளிட்ட கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

தொடர் கேலி, கிண்டல்களுக்கு உள்ளான மாணவன், தன்னுடைய உச்சகட்ட கோபத்தின் வெளிப்பாடாக சக மாணவனையே கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism