Published:Updated:

2015-ல் கடத்தி, கொலைசெய்யப்பட்ட சிறுமி, குடும்பத்துடன் வசிக்கிறாரா? - போலீஸ் விசாரணை

காவல்துறை ( ட்விட்டர் )

அவரின் டிஎன்ஏ-வை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். டிஎன்ஏ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும் எனவும் காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

2015-ல் கடத்தி, கொலைசெய்யப்பட்ட சிறுமி, குடும்பத்துடன் வசிக்கிறாரா? - போலீஸ் விசாரணை

அவரின் டிஎன்ஏ-வை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். டிஎன்ஏ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும் எனவும் காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
காவல்துறை ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 வயது சிறுமியைக் காணவில்லை என அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் புகாரளித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தீவிர தேடலுக்குப் பிறகு, ஆக்ராவில் ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடனே, உத்தரப்பிரதேசத்திலிருந்து சிறுமியின் தந்தை ஆக்ராவுக்குச் சென்று, காணாமல்போன தன் மகளின் சடலம்தான் அது என அடையாளம் காட்டினார்.

மேலும், அவரின் பக்கத்து வீட்டில் வசித்த கூலித்தொழிலாளியான 20 வயது இளைஞர் ஒருவர்மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தார். காவல்துறை அந்த இளைஞரைக் கைதுசெய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. மேலும் அவர்மீது போக்சோ வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல்
representational image

ஆனால், அவர் நீதிமன்ற விசாரணைக்கு வராததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர், அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், 2015-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டதாகக் நம்பப்படும் சிறுமி உயிருடன் இருப்பதாகவும், அவர் குடும்பத்துடன் வசித்துவருவதாகவும், சிறையில் இருக்கும் இளைஞரின் குடும்பத்தார் அலிகார் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை காவல்துறை மீண்டும் விசாரணைக்கு கையில் எடுத்திருக்கிறது.

காவல்துறை
காவல்துறை

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், ஹத்ராஸில் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார் எனக் கூறப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணை செய்திருக்கின்றனர். அவரின் டிஎன்ஏ-வைப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். டிஎன்ஏ விவரக்குறிப்பு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது. ஒருவேளை இறந்ததாகக் கருதப்படும் சிறுமிதான், தற்போது ஹத்ராஸில் வசிக்கும் இந்தப் பெண் என அவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டால், காவல்துறை நீதிமன்றத்துக்குச் சென்று, குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி விண்ணப்பிக்கும் எனத் தெரியவந்திருக்கிறது.

அப்படியானால், 2015-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தியது யார்... அலிகரில் கைப்பற்றப்பட்ட சிறுமியின் உடல் யாருடையது... அவரின் மரணம் கொலையா எனப் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடவேண்டிய கட்டாயம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் என விவரம் தெரிந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.