Published:Updated:

தமிழகத்தின் இரு முக்கிய குழந்தை குற்ற வழக்குகளின் இன்றைய நிலை என்ன?

Child Abuse
News
Child Abuse ( Pixabay )

குழந்தைகளை வைத்து சந்தைப்படுத்தும் குடும்ப வன்முறையும் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சென்னை, அயனாவரத்தில் கடந்த ஆண்டு 11 வயதுச் சிறுமியை 17 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே உலுக்கியது. அந்த வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது. தற்போது, அந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் நாம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை 19-ம் தேதி எடுத்து முடித்துள்ளோம்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு தினம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு தினம்

குழந்தைகளுக்கு எதிராக மாநிலக் குற்றப்பிரிவு சார்பாக, மாநிலப் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, 'குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி'க்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சென்னையில் 249 குற்றங்கள்!
2015 - 2017 வரையில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) ஆவணப்படுத்தியுள்ளது. அதில், சென்னையில் 2017-ல் 249 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விஸ்வநாதன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்
விஸ்வநாதன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்
விஸ்வநாதன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்
விஸ்வநாதன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

அந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசியபோது, "இந்தியாவிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. அதற்கு பொதுமக்களும் காவல்துறையுமே காரணம். பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் பெண்கள், குழந்தைகளுக்கான தனியாக சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தனியாகப் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் சென்னை பெருநகர பெண்கள் காவல் நிலையங்களைக் கொண்டுவரும் வேலை தொடர்ந்துகொண்டிருக்கிறது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் சென்னையில் குறைந்துள்ளது' என்று சென்னை மாநகர ஆணையர் பேசியிருக்கும் இந்தச் சூழ்நிலையில்தான் 2015 - 2017 வரையில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களை, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) ஆவணப்படுத்தியுள்ளது. அதில், சென்னையில் 2017-ல் 249 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. அதேபோல 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 1,29,032 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளதாகக் கூறுகிறது.

தேசியக் குற்ற  ஆவணக் காப்பகம்
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

2015 -ல் 94,172 ஆக இருந்த குற்றச்சம்பவங்கள் 2016 -ல் 1,06,958 ஆக உயர்ந்துள்ளதாக ஆவணம் தெரிவிக்கிறது. அதேபோன்று மாநிலங்களைப் பட்டியலிட்ட குற்ற ஆவணக் காப்பகம், உத்தரப்பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு அதிகபட்சமாக 19,145 குற்றங்கள் நடந்துள்ளதாகக் கூறுகிறது. தமிழகத்தில் நடந்த குற்றங்கள் 3,580. குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகளை ஆய்வு செய்தால் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என்பது தெளிவாகிறது.

பாடம் நாராயணன்
பாடம் நாராயணன்
சமூகச் செயற்பாட்டாளர்

இது குறித்து பேசிய சமூகச் செயற்பாட்டாளர் பாடம் நாராயணன், "இந்தியாவில்தான் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் மிக வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சட்டங்கள் சரியான முறையில் கையாளப்படவில்லை என்பதுதான் மிகவும் வருந்தக்கூடிய ஒன்று. குறிப்பாக, அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது ஒரு சிறுமியின் வழக்கு மட்டுமல்ல; இது போன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில்தான் உள்ளன.

இப்படி, குற்றங்களைத் தடுக்கும் சட்டங்களும் அமைப்புகளும் சரியாகக் கையாளப்படாத அவலநிலை ஒருபுறம் என்றால், குழந்தைகளை வைத்து சந்தைப்படுத்தும் குடும்ப வன்முறையும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பால்ய திருமணம், குழந்தைகள் தத்தெடுப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குழந்தைகளை மையாக வைத்து மிகப் பெரிய மாஃபியா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே 'குழந்தைகள் காப்பகம்' அதிகம் உள்ள மாநிலம், தமிழ்நாடு. அந்தளவிற்குக் குழந்தைகள் ஆதரவற்ற நிலை தொடர்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம். இதற்கான சட்டங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை சரியாகச் செயல்படாத விளைவே காரணம்" என்றார்.

வாய்பேசாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீசப்பட்டாள். அவருடைய தந்தை அந்த இடத்திற்கு வந்த படம்.
வாய்பேசாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீசப்பட்டாள். அவருடைய தந்தை அந்த இடத்திற்கு வந்த படம்.

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் 2014-ம் ஆண்டு வாய்போசாத சிறுமி மிகக் கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முள் புதர்களில் தூக்கி விசப்பட்டாள். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக வழக்கைத் தொடர்ந்த மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்பிராஜனிடம் பேசியபோது "இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது வழக்கு பதியவே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. தற்போது அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றம் செய்தவர்களுக்காக ஆயிரம் பேர் பேசுகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு யாருமே பேச முன்வரவில்லை." என்றார்.

'வாய்மையே வெல்லும்' என மீண்டும் மீண்டும் ஆறுதல் படுத்திக் கொள்வோம்!