Published:Updated:

கோவை: `இரவில் அட்டகாசம் செய்யும் ட்ரவுசர் கொள்ளையர்கள்!’ - அச்சத்தில் மக்கள்

கோவை ட்ரவுசர் கொள்ளையர்கள்
கோவை ட்ரவுசர் கொள்ளையர்கள்

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேலாடையின்றி ட்ரவுசர்களுடன் உலாவும் கொள்ளையர்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை இருகூர் அருகே, நள்ளிரவில் மேலாடையின்றி கையில் ஆயுதங்களுடன் சில ஆசாமிகள் வலம் வந்த சி.சி.டி.வி காட்சிகள் கடந்த மாதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோல, பீளமேடு அருகேயும் நள்ளிரவில் மேலாடையின்றி சிலர் வீடுகளை நோட்டமிட்டு சென்ற காட்சிகள் வெளியாகியிருந்தன.

ட்ரவுசர் கொள்ளையர்கள்
ட்ரவுசர் கொள்ளையர்கள்
கோவை: அரைகுறை ஆடை;  கையில் ஆயுதங்கள்! - அதிர்ச்சி கொடுக்கும் நள்ளிரவு ஆசாமிகள்

பீளமேடு பகுதியில் அந்த கும்பல் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து முயற்சி செய்தது. சிங்காநல்லூர் சுற்று வட்டாரங்களில் அந்த கும்பல்கள் உலா வந்துள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் தங்களது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இருகூரில் நேற்று நள்ளிரவு ஒரே நாளில் 4 இடங்களில் இந்த கும்பல் கொள்ளை முயற்சி செய்துள்ளனர். ஏ.ஜி புதூர் அருகே உள்ள புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி உள்ளே குதித்துள்ளனர். அப்போது பொதுமக்கள் அருகில் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ட்ரவுசர் கொள்ளையர்கள்
ட்ரவுசர் கொள்ளையர்கள்

பின்பு சிங்காநல்லூர் கோத்தாரி நகரில் ஒருவரது வீட்டில் கதவை உடைக்க முயற்சித்தபோது, பொதுமக்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்தும் தப்பி ஓடியுள்ளனர். மீண்டும் சிங்காநல்லூர் கதிரவன் கார்டன் அருகில் ஒரு வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர்.

அங்கிருந்தவர்கள் சத்தம்போடவே, கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து, ஸ்ருதி என்கிளேவ் அருகே உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்தனர். அங்கேயும், மக்கள் சத்தம் போட, கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “நள்ளிரவில் வலம் வரும் இந்த ஆசாமிகளால் பயமாக இருக்கிறது.

ட்ரவுசர் கொள்ளையர்கள்
ட்ரவுசர் கொள்ளையர்கள்

விரைவில் அவர்களை கைது செய்யுங்கள்” என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சிங்காநல்லூர், இருகூர், சூலூர், பீளமேடு, போத்தனூர் பகுதிகளில் உலாவும் இந்தக் கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு